Pages

Tuesday 5 October 2010

Are we in the Dark age ..பக்கீர் பைத் .? Colombo DS School's Silly Programme

பக்கீர் பைத் (1 of 3)



பக்கீர் பைத் (2 of 3)





பக்கீர் பைத் (3 of 3)





அகில இலங்கை தமிழ் மொழித்தினப் போட்டிகளில் 2000ம் ஆண்டு முஸ்லிம்களின் 
கலாசாரத்திற்கு உரிய இடத்தை வழங்கும் முகமாக போட்டி நிரலில் முஸ்லிம் நிகழ்ச்சி உட்படுத்தப்பட்டது. அந்த வகையில் 2007ம் ஆண்டு முஸ்லிம் நிகழ்ச்சி தலைப்பாக 'பக்கீர் பைத்' அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. அப்போட்டி நிகழ்சியில் முதன் முறையாக கொழும்பு D.S.Senanayke கல்லூரி போட்டியிட்டு அகில இலங்கை ரீதியாக முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டது. இது D.S.Senanayke கல்லூரி வரலாற்றிலும் தமிழ் மொழித்தின போட்டி வரலாற்றிலும் முதன் முறையாகும். இப்போட்டி நிகழ்ச்சியில் M.O. saiful islam, M.H.M. Haneek, A.C.M. sohail, Thnzeem Irshad, M.Mujahid Nizardeen, M.A.M.Afraaz, M.F.M. Sajith Ahmad, M.J.M.Hafrath போன்ற மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி பொறுப்பாசிரியையாக திருமதி Rifa saleem அவர்களும் நிகழ்ச்சி பயிற்றுவிப்பாளராக திரு. J.A.M. Irshad Hussain அவர்களும் செயற்பட்டனர் . பாடல் வரிகள் திரு. கலாபூஷணம் S.I.Nagoor Gani அவர்களால் எழுதப்பட்டது. பாடலுக்கு இசையமைப்பாளர் திரு. M.S. Selvaraj இசையமைத்தார். இவ்வெற்றிக்கு பின்னால் உறுதுணையாக இருந்த கல்லூரி அதிபர் திரு. Asoka Senani Hewage, தமிழ்ப் பிரிவு பொறுப்பாசிரியை திருமதி. N.Naslima Ameen, தமிழ்ப் பிரிவு இணைப்பாளர் திரு. T.P. Parameshwaran, ஆசிரியை திருமதி jawadh ஆகியோருக்கு எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

Compare with Below Video;(Kufr Bawa culture = Hindu Culture)




Nagore Sessions - The Saint





Ya Haja




Ya Allah - Laya Project



Our Analysis; (will be uploaded asap)


Home            Sri Lanka Think Tank-UK (Main Link) 

Monday 23 August 2010

London ல் இவர்கள் யார்?: ஈஸ்ட் ஹேம் தவ்வா நிலையம் (East Ham Dawwa Centre)

லன்டனில் வாழும் தமிழ் பேசும் இந்திய இலங்கை மக்களால் கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு முன்பு ஈஸ்ட் ஹேம்; தவ்வா நிலையம் (East Ham Dawwa Centre-London UK) ஆரம்பிக்கப்பட்டது. இதனுடய ஆரம்ப நிலைபாடு குர்ஆன் ஸூன்னாவுக்குட்பட்டதாக இருந்தது. காலப் போக்கில் இந்த நிலை மாறி அகீதாவில் முரண்பாடுள்ள இயக்கங்களின் ஆதிக்கம் மேலோங்கப்பட்டு சமரச தவ்வா நிலையமாக உருவமெடுத்துள்ளது. இதற்கான காரணம் இதில் இருக்கக் கூடிய முக்கிய பதவி வகிப்பவர்கள் குர்ஆன் சுன்னா போர்வைக்குள் இருக்கும் Fake Dawwa - ஜமாஅத்தே இஸ்லாமி கொள்கையை சார்ந்தவர்கள்.

இவர்கள் நாங்களும் குர்ஆன் சுன்னாவின் அடிப்படையில் தான் தவ்வா செய்கிறோம் என்பதை காட்டிக்கொள்வதற்கு குர்ஆன் சுன்னாவை கொள்கையாக கொண்ட மௌலவிமார்களை இலங்கையில் இருந்து அழைத்து வந்து அவர்களை கொண்டு மார்க்க செற்பொழிவுகள் நிகழ்த்த வைக்கிறார்கள.; இவர்களும் ஒரு சில உலக லாபங்களுக்காக அவர்களுடய பிழைகளை அவ்விடத்தில் சுட்டிக் காட்டாது பூசி
மொழுகிவிட்டு வருகிறார்கள்.

இவர்களுக்கு உதாரணம் எவர்கள் வேதத்தில் அல்லாஹ் இறக்கியவைகளை மறைத்துவிட்டு அதற்கு விலையாக சொற்ப தொகையைப் பெற்றுக் கொள்கின்றனறோ அவர்கள் நிச்சயமாக தங்கள்
வயிற்றில் நெருப்பையே நிரப்பிக் கொள்கின்றார்கள்.அன்றி மறுமையில் அல்லாஹ் அவர்களுடன் (விரும்பிப்); பேசவும் மாட்டான். அவர்களை (மன்னித்து)ப் பரிசுத்தமாக்கி வைக்கவும் மாட்டான். அவர்களுக்கு மிக்க துன்புருத்தும் வேதனைதான் உண்டு.

இவர்கள்தாம் நேர்வழிக்குப் பதிலாக வழிகேட்டையும் மன்னிப்புக்கு பதிலாக தண்டனையையும் விலைக்கு வாங்கிக் கொண்டவர்கள். (நரக)ரெருப்பை (இவ்விதம்) அவர்கள் (சுவைத்து) சகிக்கும்படிச் செய்தது எதுவே?
நபிவழிக்கு முற்றிலும் மாற்றமான இத்தகைய சமரச தவ்வா செய்வதால்
தான் குர்ஆன் சுன்னாவின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த அழைப்புப் பணி நிலையம் இன்று அதற்கு முற்றிலும் மாற்றமான கொள்கையாளர்களின் கைப்பிடிக்குள் சிக்கிவிட்டது. தற்போதுள்ள நிலமையில் இந்த நிலையத்தால் ஏற்பாடு செய்யப்படும் தவ்வா நிகழ்ச்சிகளில் அவர்களோடு சமரசம் செய்து குர்ஆன் சுன்னா கொள்கையில் உள்ள மௌலவிமார்களும் மார்க்க உரைகள் நிகழ்த்தும் போது குர்ஆன் சுன்னா மௌலவிமார்கள் ஜமாத்தே இஸ்லாமியின்
கொள்கைகளை ஏற்றுக்கொண்டதாக கருதப்படும். மக்களையும் ஜமாத்தே
இஸ்லாமியின் கொள்கைகள் சரியாகத்தானே இருக்கும் அதனால் தானே குர்ஆன் சுன்னாவில் உள்ள மௌலவிமார்களே அவர்களை ஏற்றுக் கொண்டுள்ளார்களே என்று எண்ணச் செய்து வழிதவறச் செய்து விடும். மேல்கொண்டும் இதே நிலைமையை நீடிக்காமல் அந்த நிலையத்தை குர்ஆன் சுன்னாவின் கீழ் கொண்டு வருவதற்கு தௌஹீத் மௌலவி மார்கள் அவர்கள் ஜமாத்தே இஸ்லாமியின் கொள்கையிலிருந்து
விடுபடும் வரை எந்த பங்களிப்பும் செய்யாதிருப்பதே சிறந்தது. அப்படியும்
அவர்கள் விடுபடாதவிடத்து அந்த நிலையத்தை Fake Dawwa - ஜமாத்தே இஸ்லாமி நிலையமாக முத்திரை இடவேண்டும். இங்கிலாந்திலும் இலங்கையிலும் குர்ஆன் சுன்னாவில் உள்ள அமைப்புகள் எவரும் இந்த நிலையம் ஜமாத்தே இஸ்லாமியின் பிடியிலிருந்து விடுபடும்வரை இவர்களது எந்தவொரு விடயத்திலும் பங்கு கொள்ளாது தவிர்ந்து விட வேண்டும். (SLMoor)

Home       Sri Lanka Think Tank-UK (Main Link)  

Wednesday 21 July 2010

Dr. Jamal A. Badawi's (Plus*) Sri Lanka lecture tour

Dr. Jamal A. Badawi an Egyptian domiciled in Canada will be visiting Sri Lanka on a lecture tour organised by the Centre for Islamic Studies to coincide its 25th anniversary celebrations.



Dr. Jamal Badawi is to deliver three lectures;

01). “Reforming Islam or reforming Muslims?”, on July 30th at 7.00 PM in D.S. Jayasinghe Hall, Dehiwala,

02). “Muslim in a non Muslim Society” on July 31st at 4.30 PM in Hotel Ranmuthu, Colombo 3, and

03). “Role of Muslims on emerging Post-War Sri Lanka” on August 1st at 8.30 AM in Miami Reception Hall, Colombo 6.

(NB:Plus*; The holy quran says......the man was created weak...4:28)

Home              Sri Lanka Think Tank-UK (Main Link)

Friday 18 June 2010

19.04.2010 அன்று தடுப்புக் காவல் நீடிக்கப்பட்ட நிலையில்.....அநாதரவான சாரா மாலினியும் அரபு மேலாண்மைவாத “ இஸ்லாமும்”

“இருளிலிருந்து ஒளி”க்கு என்ற இஸ்லாம் சார்ந்த சிங்கள் நூலை வெளியிட்டு இலங்கை காவல் துறையினரால் கடந்த ஒரு மாத காலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார் சாரா மாலினி பெரேரா.
19.04.2010 அன்று சகோதாரி சாரா மாலினி பெரேரா கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்திற்கு கொண்டு வருவதாகவும், அவருக்கு சரீர பிணை நிற்பதற்கு கொழும்பை வதிவிடமாகக் கொண்ட இருவர் தேவைப்படுவதாகவும் சதோரரர்கள் இம்ராஸ், கலீலுர் ரஹ்மான் ஆகியோரிடமிருந்து தகவல் கிடைக்க நீதிமன்றை நோக்கி விரைந்தோம்.

சாரா மாலினி சிறை வைக்கப்பட்ட நாள் முதல் இந்தப் பிரச்சினையை தனது சொந்தப் பிரச்சினையாய் நினைத்து ஒரு மாத காலமாக முயற்சி செய்து வரும் சகோதரர் அஜ்மல், மேமன் இனத்தைச் சேர்ந்த சகோதரர் அபூ ஆகியோர் சாரா மாலினியின் விடுதலைக்கான பெரும் எதிர்பார்ப்போடு நீதிமன்றில் காத்திருந்தனர். கூடவே கொழும்பை வதிவிடமாகக் கொண்ட இரண்டு சகோதரர்கள் பிணை நிற்பதற்காக காத்திருந்தனர்.

செய்தி கேசரிக்க வந்திருந்த உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் சிலரும் காலை முதல் மாலை வரை காத்திருந்தனர்.

ஆனால் மாலை வரை அவரை காவல் துறை நீதிமன்றத்தின் முன் நிறுத்தாமல் தடுப்புக் காவலை நீடிக்க மீண்டும் ஒரு மாத காலத்திற்கான ஆணையைப் பாதுகாப்பு அமைச்சிடமிருந்து பெற்றிருப்பதாக எமக்கு அறியக் கிடைத்தது.

இலங்கையில் வாழ்கின்ற சிங்கள, தமிழ், முஸ்லிம் மூன்று இன மக்களில் அதிகப்படியான அரசியல் கட்சிகளையும், அதிகப்படியான இயக்கங்களையும் கொண்ட சமூகமாக முஸ்லிம் சமூகம் மிளிர்ந்துக்கொண்டிருக்கின்றது.

ஆனால், சாரா மாலினி இன்று தனிமைப்பட்டிருக்கிறார். மாற்று மதத்தினருக்கு இஸ்லாத்தைப் போதிக்க தனியான பிரிவுகளை வைத்துக்கொண்டு உள்ளுரிலும் வெளிநாடுகளிலும் பணம் கறக்கும் பல இயங்கள் மௌனம் காக்கின்றன.

அல்லது வெளியே வந்து சாரா மாலினியின் பிரச்சினைக்கு முகம் கொடுக்காமல் முகத்தை மறைத்துக் கொண்டு நிற்கின்றன.

முஸ்லிம் சட்டத்தரணிகள் பகிரங்கமாக வந்து நீதிமன்றில் ஆஜராக தயக்கம் காட்டுகின்றனர். சாரா மாலினி என்ற சகோதரி யாரும் செய்யாத குற்றத்தை செய்து விட்டதாக இவர்கள் கருதுவதே இதற்கான காரணமாகும்.

ஆனால் கொலை, கொள்ளை, போதைப்பொருள் கடத்தல், போன்ற மோசமான குற்றங்களில் கைது செய்யப்படும் நபர்களுக்கு பயமின்றி ஆஜராகின்றனர்.

சாரா மாலினி விவகாரத்தில் வெளியே தலைக்காட்டாமல் ஒரு சில சட்டத்தரணிகள் திரை மறைவிலிருந்து மட்டும் ஆலோசனை வழங்கி வருவதாக அறிய வருகிறது.

மாற்று மதத்தினருக்கு இஸ்லாத்தைப் போதிக்க வேண்டும் என்ற கருப்பொருளுக்கு இலங்கையிலும், அரபு நாடுகளிலும் நல்லதொரு சந்தை வாய்ப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. தாம் பெயரளவில் முஸ்லிமாக வாழ்ந்துக் கொண்டு, செய்கின்ற அக்கிரமங்கள், அட்டுழியங்கள், அநியாயங்கள் அனைத்தையும் செய்துகொண்டு மாற்று மதத்தினருக்கு இஸ்லாத்தைப் போதிக்க வேண்டும் என்று பூச்சாண்டி காட்டும் இந்த புதிய கலாசாரத்தை அமெரிக்க நலன் சார்ந்த அரபு அரசியல் இலங்கையின் தனது ஏஜன்ட்கள் மூலமாக புகுத்தி வருகிறது.

அண்மைக் காலமாக அரபு நாடுகளின் அரசியல் நலன்களை மறைமுகமாக பாதுகாக்கும் நோக்கில் இயங்கி வருகின்ற சில இயக்கங்களின் தமது கஜானைாவை நிரப்பிக் கொள்வதற்கு சிறந்த வழியாக இதனை பிரயோகித்தும் வருகின்றன. உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உள்ள பலரின் பண உதவியை இலகுவாக வாரிச் சுருட்டிக் கொள்ளும் கவர்ச்சிகரமான இந்த சித்தாந்தத்தால் பலரும் கவரப்படுகின்றனர்.

இந்த இயக்கங்கள் இஸ்லாத்தை ஏற்ற பலரை நடுத்தெருவில் விட்டிருக்கிறது. இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட ஒரு சிலர் இந்த “ வியாபாரத்தின் ” நன்மை உணர்ந்து அவர்களும் இயக்கங்களை ஆரம்பித்து பலரை ஏமாற்றி வருகின்றனர்.

நேற்று கொழும்பு நீதிமன்றத்திற்கு சகோதரி சாரா மாலினி வந்திருந்தால்
“ இருளிலிருந்து ஒளி” க்கு சிங்கள மக்களையல்ல முஸ்லிம்களையே முதலில் மீட்க வேண்டும் என்பதை நிச்சயம் புரிந்திருப்பார்.

காரணம் சிறைச்சாலை பஸ் வண்டிகளில் கை விலங்குகளோடு வரிசை வரிசையாக வந்திறங்கி நீதி மன்ற சிறைக் கூண்டுகளில் தள்ளப்பட்டவர்களில் நூற்றுக்கு 90 வீதமானவர்கள் முஸ்லிம்கள். ( நான் ஏற்கனவே ஒரு பதிவில் எழுதியது போல் கொழும்பு இளைஞர்கள் அதிகமானனோர் பல குற்றச் செயல்களுக்கு சிறைவாசம் அனுபவிக்கின்றனர்.

வியாபார கொடுக்கல் வாங்கல்களில் மோசடி செய்து சிறைவாசம் செல்பவர்கள் அதிகம் முஸ்லிம்களே. அரசியல், இயக்கம், ஜமாஅத், பதவி ஆசை, போட்டி, பொறாமையில் சிக்குண்டு சின்னாபின்னப்பட்டு போனவர்கள் முஸ்லிம்களே.

இலங்கையின் அரசியல் நிகழ்வுகள் முதல் இயக்க முரண்பாடுகள் வரை இலங்கை முஸ்லிம்கள் சச்சரவுகளாலும் பிரச்சினைகளாலும் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். (அண்மைய தேர்தலும் பேருவளை கொலைக்களமும் இதற்கு வாழும் சான்றுகள்).

இஸ்லாமிய வாழ்க்கை நெறியை தொலைத்து, மறுமையை மறந்து, நன்மையை தீமையை கருத்தில் கொள்ளாது பணத்தின் பின்னால் மூச்சுத்திணர ஓடும் இந்த முஸ்லிம் சமூகத்தின் ஒரு குரலாக, சவாலாக தான் சிங்கள் சமூகம் சாரா மாலினியின்“ இருளிலிருந்து ஒளி” என்ற இஸ்லாத்தின் அழைப்பை பார்க்ப் போகின்றது.

மறு புறம் இஸ்லாமிய (?) பிரசாரத்திற்காகவும் பள்ளிவாசல்கள் கட்டுவதற்காகவும் பணத்தை வாரி வழங்கும் வள்ளல்கள் வாழ்கின்ற அரபு நாடுகளில் இஸ்லாம் மௌனமாக மரணித்துக் கொண்டிருக்கிறது. மனிதம் மறைந்து கொண்டிருக்கிறது.

சகோதரி சாரா மாலினிக்கு கிடைத்த வாழ்க்கை வசதிகள் இலங்கையிலிருந்து செல்லும் ஏனைய சிங்கள சகோதரிகளுக்கு கிடைக்கின்றனவா?

அரபுகள் என்போர் நெஞ்சிலே ஈரமில்லாத மிருகங்கள் என்றே அவர்கள் தமது எஜமானர்களை அழைக்கின்றனர்.

தமது வீட்டுப் பணிப்பெண்களை அடிமையாக வதைத்து மோசமான பாலியல் குற்றங்களை புரியும் அரபுகளிடம் என்ன இஸ்லாம் இருக்கிறது?

அரபு நாடுகளில் பணிப்பெண்ணாக வேலைக்குச் சென்று பாலியல் மற்றும் சித்திர வதைக்கு ஆளான ஆயிரமாயிரம் சிங்கள சகோதரிகளில் ...இவரும் ஒருவர். கொடுமை சித்திரவதைகள் புரியும் இவர்களிடம் என்ன இஸ்லாம் இருக்கிறது. வீட்டுப் பணிப் பெண்களை மேல் மாடியிலிருந்து தள்ளிவிட்டு, நெருப்பால் சுட்டு, தாக்கி முடமாக்கும் அரபுகளின் இஸ்லாத்தை ஏற்க இலங்கையின் சிங்கள சமூகம் தயாராகுமா?

இந்தக் கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுப்பதற்கு எந்த இயக்கம் முன் வந்தது? பள்ளிவாசல்கள் கட்டி முஸ்லிம் உம்மத்தை நாளுக்கு நாள் பிரிக்காமல் இந்த ஏழை சகோதரிகளுக்கு ஒழுங்கான சம்பளத்தை வழங்கி மனிதனாக முஸ்லிமாக இவர்களோடு நடந்தால் இஸ்லாத்தைப் பற்றிய நல்ல செய்தியை இவர்களின் உள்ளங்களுக்குள் கொண்டு சென்றிருக்கலாமே!

இன்று அரபுகளின் மிருகத்தனமான குரூரமான உணர்வுகளைத்தான் இஸ்லாம் என்று இந்த சிங்கள சமூகம் ஏற்றிருக்கிறது. இது மட்டுமில்லாமல் அரபுகளின் குற்றங்குறைகளை மூடி மறைத்து அதற்கு இஸ்லாமிய சாயம் பூசும் “கொந்தராத்து“ வேலையை செய்வதற்கு கூலிப்பட்டாளம் ஒன்றையே அரபு நாடுகள் இலங்கையில் பணிக்கமர்த்தியும் உள்ளன.

சாரா மாலினி “இருளிலிருந்து ஒளி”க்கு என்ற புத்தகத்தைப் பிரசுரித்து சிங்கள் சமூகத்திற்கு அழைப்பு விடுப்பதற்கு முன் தான் வாழ்கின்ற பஹரைன் உட்பட அரபு நாடுகளில் வாழ்கின்ற அரபுகளுக்கு இஸ்லாத்தை எடுத்துச் சொல்லி அவர்களை உண்மையான இஸ்லாமிய வாழ்க்கைக்கு அழைப்பதுவே காலத்தின் தேவையாகும்.

உலகில் பாரிய ஒரு மாற்றத்தை உருவாக்க முதலில் முழு அரபுலகையும் இஸ்லாத்தை நோக்கி திசை திருப்புவதன் பணியைத்தான் மேற்கொள்ள வேண்டும். அரபுகளை மீண்டும் இஸ்லாத்தின் ஒளிக்கு அடித்து இழுத்து வரவேண்டும்.

சாரா மாலினியைப் பொருத்தவரை இன்று அவர் சிங்கள சிறையில் வாடுகிறார். இஸ்லாத்தைப் போதிப்பதற்கு அரபு நாடுகளை விட இலங்கையில் இன்னும் சுதந்திரம் இருக்கிறது.

அரபு நாடுகளில் மன்னர்கள் அனுமதித்த விடயத்தைத் தவிர எதையும் பேச முடியாது. இஸ்லாத்தின் எதிரிகள் பற்றி வருகின்ற அல்குர்ஆன் வசனங்களைக் கூட அங்கே பகிரங்கமாக ஓத முடியாது. அல்லாஹ்வின் சட்டத்திற்கே ஆப்பு வைத்திருக்கின்றன இந்த அரபு நாடுகள்.

அல்லாஹ்வின் சட்டத்திற்கும், முஹம்மதுர் ரசூலுல்லாஹ்வின் முன்மாதிரிக்கும் மாற்றமாக வாழும் அரபுகளின் இஸ்லாத்தை சிங்களவர் மட்டுமல்ல ஈமானுள்ள எந்த இஸ்லாமியனும் ஏற்றுக்கொள்ள மாட்டான்.

இந்த கொடுமைகளை மூடி மறைத்து இஸ்லாமிய பணி புரிவதால் ஏதும் பிரயோசனம் இல்லை எனபதை நாங்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.

அரபு நாடுகளில் உண்மையான இஸ்லாத்தை பேசியதற்தகாக எத்தனைப் பேர் கொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள்? அரபுகளின் அமெரிக்க சார்பு அரசியலை விமர்சித்ததற்காக எத்தனை மக்கள் சிறையில் வாடுகிறார்கள்? அரபு நாடுகளில் இஸ்லாத்தைப் போதிக்க அநியாயத்தை எதிர்க்க சுதந்திரம் அறவே இல்லை என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

தலைமைத்தும் ஒன்று இல்லாமல் பிரிவினையை அச்சாணியாக்கி சுழன்றுக் கொண்டிருக்கின்ற உலகளாவிய முஸ்லிம் உம்மத் எப்படி மற்றை சமூகத்திற்கு வழி காட்ட முடியும்?

விழியிழந்த குருடன் மற்றவருக்கு வழிகாட்டத்தான் முடியுமா?

சகோதரி சாரா மாலினி!

இது இஸ்லாத்தின் அடிப்படை புரியாமலும், அரபுகளின் அரசியல் புரியாமலும் இஸ்லாமிய பிரசாரம் புரிய இலங்கை வந்த உங்களுக்கும்
உங்களைப் போன்றே அமெரிக்க அரபு அரசியல் மேலாண்மை வாதத்தை இஸ்லாமிய தஃவா என்று போதித்து முழ உலகையும் ஆக்கிரமித்து வரும்

அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும், அதன் நலன் சார்ந்த ஓர் இஸ்லாமிய உலகையும் உருவாக்க ஒத்துழைப்பு நல்கிவரும் நம் நாட்டு தஃவா கூலிப்பட்டாளத்திற்கும் கொடுக்கும் ஒர் ஆலோசனை மட்டுமே!

Home                 Sri Lanka Think Tank-UK (Main Link)

Wednesday 9 June 2010

What is 'Secularism'...?

NB: No Muslim Clerics, No Religious thinking & No Religious leadership is allowed in Islam, Only intellectual thinking with intellectual leadership of Islam is allowed! says M. R. Mohamed, (Minority Political, Muslim Enlightenment, Forward Islamic & Protestant Muslim ‘Thinker’ of Sri Lanka).



Home           Sri Lanka Think Tank-UK (Main Link)

Tuesday 8 June 2010

In the Name of.... மத்ஹப்..........

NB:


மத்ஹபுகளில் காணப்படும் ஆபாசத்தைப் போதிக்கும் சட்டங்கள் சிலவற்றைப் தெளிவு படுத்தவுள்ளோம். ஒருவன் இப்படியெல்லாம் சிந்திப்பானா? என்று எண்ணுமளவிற்கு மத்ஹபு நூலாசிரியர்கள் கற்பனை செய்துள்ளார்கள். வக்கிர புத்தி கொண்டவர்களை விடவும் இந்த மத்ஹபு நூலாசிரியர்கள் மிக மோசமாக கற்பனை செய்துள் ளார்கள் என்பதை நாம் அவர்களது நூற்களிருந்தே மேற்கோள்காட்டுவதிலிருந்தே நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

இஸ்லாம் அறிவுப்பூர்வமான மார்க்கம் என்பதை முஸ்லிம்களாகிய நாம் அனைவரும் ஏற்றிருக்கின்றோம்.

இத்தகைய இஸ்லாமிய மார்க்கத்தை இழிவுபடுத்தும் அடிப்படையில் பின்வரும் மத்ஹபுச் சட்டம் அமையப் பெற்றிருப்பதைப் பாருங்கள்.

MATHHAB-1ஒரு நாய் அல்லது பன்றி மனித இனத்தைச் சார்ந்த பெண் மீது பாய்ந்து உடலுறவு கொண்டு அவள் ஒரு மனிதக் குழந்தையைப் பெற்று விட்டால் அந்தக் குழந்தை அசுத்தம்தான். இவ்வாறு அசுத்தமாக இருப்பதுடனே தொழுகை மற்றும் இதர கடமைகள் அவன் மீது கடமையாக்கப்பட்டுவிட்டன. அக்குழந் தையை (தொடக்கூடாது இருப்பினும்) தொடுவது நிர்ப்பந்தமாக இருப்பதால் மன்னிப்பு உண்டு. அவன் மேல் ஈரம் இல்லாவிட்டால் பள்ளிக்கு வருவது கூடும். (நூல் பத்ஹுல் முயீன் ஷரஹுகுர்ரதுல் ஐன் பாகம்-1 பக்கம்-34)

எவ்வளவு மடமைத்தனமான விடயத்தைப் போதிக்கிறது இந்த ஷாபி மத்ஹபு நூல் பார்த்தீர்களா? இப்படி யாராவது சிந்திப் பார்களா? நாய் பன்றி ஒரு பெண்ணிடம் உடலுறவு கொண்டு மனிதக் குழந்தை பிறந்தால் என்ற நிபந்தனையுடன் ஆபாசம் ஆரம்பமாகிறது. அப்படியென்றால் நாய் பன்றி ஒரு பெண்ணிடம் உடலுறவு கொண்டால் நாயும் பன்றியும்தான் பெண்ணின் வயிற்றில் வளரும் என்று இந்நூலாசிரியர் சொல்ல வருகின்றாரா?

அதனால்தான் மனிதக் குழந்தை பிறந்தால் என்ற நிபந்தனை போட்டார் போலும். இஸ்லாத்திற்கு வெளியே இருப்பவர்கள் இதை அறிந்தால் இஸ்லாத்தைப் பற்றி எப்படி கணிப்பிட்டுக் கொள்வார்கள். மேலும் அக்குழந்தை அசுத்தம் என்று கூறி விட்டு தொழலாம் என்று கூறுவது எவ்வளவு மடமைத்தனம். சிந்தியுங்கள் இச்சட்டம் எவ்வளவு பைத்தியகாரத்தன மாகவும் ஆபாசமாகவும் உள்ளது என்பது விளங்கும். கிறுக்குத் தனமானதும் முட்டாள் தனமானதுமான மற்றுமொரு ஆபாசத்தை கற்பனை செய்யும் மத்ஹபுச் சட்டத்தைப் பாருங்கள்.

MATHHAB_2

உண்ணத்தக்க பிராணி இரண்டும் உடலுறவு கொண்டு மனித வடிவில் குழந்தை பெற்றால் அவன் தூய்மையான வனாவான். அவனை உண்ணலாம். இவன் குர்ஆனை மனனம் செய்து கதீபாக பணிபுரியலாம். நமக்கு ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையை இவன் நடத்தலாம். தொழுகை முடிந்த பிறகு அவனையே குர்பானியும் கொடுக்கலாம். (நூல்: இஆனதுத் தாலிபீன் பாகம்-1 பக்கம்-113)

ஆடும் ஆடும் சேர்ந்தால் ஆடுதானே பிறக்கும் மனிதன் பிறப்பானா? பிறக்கக் கூடும் என மத்ஹபு கூறுகிறது. ஒரு ஆடு மாட்டுடனோ அல்லது மாடு ஆட்டுடனோ சேர்ந்தால் மனித வடிவில் குழந்தை பிறக்கலாம் என மத்ஹப் கூறுகிறது. இது நடைமுறைச்சாத்தியமா? அறிவியல் இதை நம்புமா? இஸ்லாம் இப்படிப்பட்ட உளறலை கூறியிருக்குமா? அறிவுடையோர் இதை ஒப்புக் கொள்வார்களா? சிந்தியுங்கள். மிருகமும் பெண்ணும் சேர்ந்த பின் பிறக்கும் குழந்தை அசுத்தமாம் மிருகமும் மிருகமும் சேர்ந்த பின் பிறக்கும் குழந்தை சுத்தமாம் வித்தியாசம் ஏதேனும் தெரிகிறதா? அறிவுள்ளவன் எவனாக இருந்தாலும் இச்சட்டத்தைப் பார்த்தால் கொதித்தெழவே செய்வான்.மனிதப் பண்புகளை வேரோடு தகர்த்தெறியும் இச்சட்டத்தை ஏற்க எந்த மனிதனாவது முன்வருவானா? மத்ஹப் வாதிகளே சிந்தியுங்கள்!

இச்சட்டத்தை நீங்கள் ஏற்பீர்களா? இனியும் இந்த மத்ஹபு தேவைதானா?

மற்றொரு ஆபாசத்தை கற்பனை செய்யும் மத்ஹபுச் சட்டத்தைப் பாருங்கள்.

mathhab_3ஆணுறுப்பு என்ற வார்த்தை தன்னுடைய ஆணுறுப்பையும் குறிக்கும். எனவே ஒருவன் தன்னுடைய ஆணுறுப்பைத் தனது பின் துவாரத்தில் விட்டான் என்றால் அதற்காக அவனுக்குத் தண்டனை கொடுக்கப்படும். (நூல்: இஆனதுத் தாலிபீன் பாகம்-4 பக்கம்-162)

எப்படி சிந்தித்துள்ளார்கள் இந்த மத்ஹபு வாதிகள் பார்த்தீர்களா? மிருகஜாதிக்கு மட்டுமே தோன்றக்கூடிய கற்பனைகளை மார்க்க சட்டங்கள் என்ற பேரில் இவர்கள் எழுதி வைத்துள்ளனர். குர்ஆன் ஹதீஸில் இதற்கு ஆதாரம் உள்ளதா? என்று கூட கேட்க முடியாத அளவுக்கு நா கூசுகின்ற அருவருக்கத் தக்க ஆபாசங்களை உள்ளடக்கியுள்ள இந்த மத்ஹபு நூற்களை என்ன செய்வது?

மற்றொரு ஆபாசத்தை கற்பனை செய்யும் மத்ஹபுச் சட்டத்தைப் பாருங்கள்.

மார்க்கக் கடமைகள் விதியாக்கப்பட்ட வயதினன் தனது ஆணுறுப்பை ஒரு சிறுமியின் பெண்ணுறுப்பில் நுழைத்து விடுகிறான். அந்தச் சிறுமி ஒருநாள் குழந்தையாக இருப்பினும் அவ்வாறு நுழைந்ததற்காக அவனுக்கு (விபச்சாரத்திற்கான) தண்டனை வழங்கப்படும். அதுபோல் ஒரு பெண் தனது பெண்ணுறுப்பில் ஒரு சிறுவனுடைய ஆணுறுப்பை நுழைத்து விடுகிறாள். அந்த சிறுவன் ஒருநாள் வயதுப் பையனாக இருப்பினும் அவ்வாறு அவள் நுழைத்ததற்காக அவளுக்கு விபச்சாரத்திற்கான தண்டனை வழங்கப்படும். (நூல் இஆனதுத் தாலிபீன் பாகம்-4 பக்கம்-162) இச்சட்டங்களை எழுதுவதற்குக்கூட கை கூசுகிறது என்ன செய்வது மத்ஹபுகளுக்கு வக்காளத்து வாங்குபவர்களுக்கு மத்ஹபுகளிலுள்ள அபத்தங்களை எடுத்துக் கூறியாவது அதிலிருந்து அவர்களை விடுபட வைப்பது எமது கடமை என்பதால் இவைகளைக் கூறுகின்றோம். மேற்கூறப்பட்ட ஆபாசச் சட்டங்கள் அனைத்தும் எமது நாட்டிலுள்ள அறபு மத்ரஸாக்களில் போதிக்கப்படும் ஷாபி மத்ஹபு நூற்களில் காணப்படுபவைகளாகும்.

இதைவிட மோசமாகவும் கேவலமாகவும் நாங்களும் சளைத்தவர்களல்ல என்ற அடிப்படையில் ஹனபி மத்ஹபுக்காரர்கள் சிந்தித்திருப்பதை நாம் இப்போது சொல்லும் தகவலை வைத்து நீங்கள் புரிந்து கொள்லாம்.

ஒருவன் தனது ஆணுறுப்பை ஒரு மிருகத்திடம் அல்லது இறந்துவிட்ட பெண்ணிடம் இந்திரியம் வெளிப்படாதவாறு செலுத்தினால் அல்லது மிருகத்தின் (பெண்) உறுப்பைத் தொட்டால் அல்லது தன்னுடைய ஆணுறுப்பின் துவாரத்தில் தண்ணீரை அல்லது எண்ணையை சொட்டவிட்டு அது உள்ளே இருக்கும் மூத்திரப் பையை அடைந்தாலும் சரி நமது மத்ஹபின் படி (நோன்பு முறியாது) (நூல்: அத்துர்ருல் முக்தார் பாகம்-2 பக்கம்-439)

எப்படி கற்பனை பார்த்தீர்களா? இப்படியெல்லாம் ஒருவன் கற்பனை செய்வானா? எவ்வளவு ஆபாசமாக இம்மத்ஹபுச் சட்டம் உள்ளது. சிந்தியுங்கள் இனியும் மத்ஹபுப் பிடிவாதம் தேவைதானா?

மற்றொரு ஆபாசத்தை கற்பனை செய்யும் ஹனபி மத்ஹபுச் சட்டத்தைப் பாருங்கள்.

mathhab_4தேர்ந்தெடுக்கப்பட்ட சொல்லின் பிரகாரம் பார்த்தால் ஆசை ஏற்படாத சிறுமியிடம் அல்லது இறந்துவிட்ட பெண்ணிடம் அல்லது ஒரு மிருகத்திடம் உடலுறவு கொள்வதால் வுழு நீங்க மாட்டாது. ஆண் குறியை மாத்திரம் கழுவி விட வேண்டும். (நூல்: அத்துர்ருல் முக்தார்: பாகம்-1இ பக்கம்-179)

இவ்வளவு ஆபாசமாகக் கூட கற்பனை செய்ய முடியுமா? மத்ஹப்வாதிகள் கறபனை செய்தது போன்று கற்பனை செய்யலாம் என்று வைத்துக் கொள்வோம். இந்தச் சட்டங்களுக்கு ஆதாரமாக அமைந்த அல்குர்ஆன் வசனங்கள் யாவை? அல்லது ஹதீஸ்கள் யாவை? அடுத்து இவர்கள் கூறும் மேற்கூறப்பட்ட சட்டத்திற்கு ஒத்த மற்றொரு சட்டத்தைப் பாருங்கள்.

பார்த்தால் ஆசை ஏற்படாத சிறுமியிடம் உடலுறவு கொள்வதால் குளிப்பு கடமையாகாது. வுழுவும் நீங்காது. இதைச் செய்தால் குளிப்பு கடமையில்லை என்று கூறும் போது இது செய்யத்தக்க காரியம் என்ற கருத்து மறைந்துள்ளது. இப்படி நடக்கக் கூடியவர்கள் இருக்கிறார்கள் என்றே வைத்துக் கொண்டாலும் இதனால் குளிப்பு கடமையில்லை என்று எப்படிக் கூற முடியும்? அதற்கான ஆதாரம் என்ன?

மற்றொரு ஆபாசத்தை கற்பனை செய்யும் ஹனபி மத்ஹபுச் சட்டத்தைப் பாருங்கள்.

mathhab_5 ஒருவர் தனது மறைவுறுப்பில் துணியைச் சுற்றிக் கொண்டு உடலுறவில் ஈடுபடுகிறார். அப்போது உடலுறவின் இன்பத்தை அவர் அடைந்தால் குளிப்புக் கமையாகும். இல்லையெனில் குளிப்புக் கடமை இல்லை.

உறுப்பிலே துணியைச் சுற்றிக் கொண்டு உடலுறவில் ஈடுபடும் சாத்தியம் உண்டா? சாத்தியம் என்று வைத்துக் கொண்டாலும் உடலுறவு இன்பத்தை அடைந்தால் மட்டும் குளிப்புக் கடமை என்று கூறுவது சரியா? இந்த ஹதீஸை வாசித்துப் பாருங்கள் பதில் கிடைக்கும்.

‘ஒருவர் தம் மனைவியின் (இருகை இருகால் ஆகிய) நான்கு அங்கங்களுக்கிடையில் வீற்றிருந்து உள்ளீடு செய்துவிட்டாரானால் அவர் மீது குளியல் கடமையாகி விடுகிறது. (விந்து வெளியாகாவிட்டாலும் சரியே!) என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி) நூல்: ஸஹீஹுல் புஹாரி-291)

இதே ஹதீஸ் இன்னும் சில அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. ஹதீஸ் தெளிவாக குளிப்பு கடமை என்று கூறியிருக்க மத்ஹப் கூறும் கற்பனைச் சட்டம் கூடாது என்கிறது எதை நாம் பின்பற்ற வேண்டும். தீய சிந்தனை கொண்டவர்களையும் வக்கிர எண்ணம் கொண்டவர்களையும் உருவாக்கிவிட முனையும் வகையில் ஆபாசத்தைத்தான் மதஹபுகள் போதிக்கின்றன என்பதை இனியாவது இந்த மத்ஹபு வாதிகள் சிந்தித்து மத்ஹபுகளை உதறித் தள்ளி விட்டு குர்ஆன்இ ஹதீஸின் பக்கம் வருவார்களா?

மூலம் -dharulathar.com & Ilmul Islam

Saturday 5 June 2010

Tuesday 1 June 2010

இளிச்சவாயர்களைக்கொண்ட All Ceylon Muslim Clerics’ Association (ACMCA) & Sri Lanka Muslim சமூகமும்!

NB:


இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் All Ceylon Muslim Clerics’ Association (ACMCA)சபைக்கு விஜயம் செய்து அதன் தலைவர் உட்பட அதன் செயலாளருடன் “மகிழ்ச்சி” கரமாக கருத்துப் பறிமாறுகின்றார்.

முஸ்லிம் உலகை ஆக்கிரமித்து சிதைத்து சின்னாபின்னப்படுத்தும் ஒரு நாடு அமெரிக்கா. அதன் அடாவடித்தனத்தாலும், ஆக்கிரமிப்பாலும், அநியாயத்தாலும் இராணுவ பலத்தாலும் ஆயிரமாயிரம் முஸ்லிம்கள் அல்லல் பட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.

இலடசக் கணக்கானோர் காயங்களோடு கப்றுகளுக்குள் உறங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.

அமெரிக்க இராணுவத்தால் கணவன்மார் கொலை செய்யப்பட்டு விதவைகளான ஆயிரக்கணக்கான எங்கள் உடன் பிறவா சகோதரிகள் ஈராக் வீதிகளில் விபசாரத்தை தனது தொழிலாக மாற்றியிருக்கின்றார்கள்.

தாய், தந்தையை இழந்த அனாதைச் சிறுவர்கள் அமெரிக்க இராணுவத்தின் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகிக்கொண்டிருக்கிறார்கள்.

தற்கொலைக் குண்டுத் தாக்குதல் என்ற போர்வையில் அமெரிக்கா வடிவமைக்கும் குண்டு வெடிப்புகள் நாளுக்கு நாள் அரங்கேறி வருகின்றன.

ஈராக், பலஸ்தீன், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் பல உயிர்களை காவு கொள்ள காரணமாய் இருந்ததும் காட்டுமிராண்டித்தன ஆக்கிரமிப்பு அரசியலை முஸ்லிம் நாடுகளில் கட்டவிழ்த்து விட்டு முஸ்லிம்களின் இரத்தத்தையும், அந்நதந்த நாடுகளின் வளங்களையும் உறிஞ்சிக் குடிப்பதை குறிக்கோளாய் கொண்டு அதன் ஆக்கிரமிப்புப் போர் ஆரம்பமானது.

அதன் இராணுவ சப்பாத்துகளின் கீழ் நசுங்குண்டு ஈராக் தன் இன்று இறுதி மூச்சை வாங்கிக்கொண்டிருக்கிறது.

இஸ்ரேலின் மனிதாபிமானத்திற்கு எதிரான செயல்களை பாதுகாக்கும் அமெரிக்காவின் வீட்டோ அதிகாரத்தில் சிக்குண்டு பலஸ்தீன் திறந்த வெளிச்சிறையொன்றில் தவித்துக் கொண்டிருக்கிறது. உணவு, மின்சாரம், தண்ணீர் என்று அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்டு அவர்கள் வாழ்வுக்காக மன்றாடிக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆப்கான் அழிந்துக்கொண்டிருக்கிறது.

முஸ்லிம் உலகின் மீது இவ்வளவு அக்கிரமங்களையும் நிகழ்த்திக் கொண்டு ஒரு சில முஸ்லிம் நாடுகளோடும், ஒரு சில முஸ்லிம் இயக்கங்களோடும், அமைப்புகளோடும் மறைமகமாவும், நேரடியாகவும் கொலைகார அமெரிக்கா நட்பை பேணி வருகிறது.

இந்த அமெரிக்க முஸ்லிம் (?) நட்பின் மூலம் முஸ்லிம் உலகை காட்டிக்கொடுக்கும் கைங்கரியத்தை இந்தக் கைக்கூலி கும்பல்கள் சாதுர்யமாக செய்தும் வருகின்றன. (Badurkalam/
Ends)

பன்றி இறைச்சி தயாரிக்கும் கீல்ஸ் நிறுவனத்தின் அனுசரணையில் கொழும்பில் All Ceylon Muslim Clerics’ Association ஹலால் மாநாடு 2010...

NB:



All Ceylon Muslim Clerics' சபையின் ஹலால் பத்வா விவகாரம் அடிக்கடி இலங்கை முஸ்லிம் சமூகத்தில் சா்ச்சைகளை கிளப்பி வருகின்றது. கண்மூடித்தனமாக All Ceylon Muslim Clerics' சபை கொடுக்கும் பத்வா பல பல்தேசிய நிறுவங்களை (குறிப்பாக அமெரிக்க, பிரித்தானிய கம்பனிகளை) அதிக லாபமீட்டும் நிலைக்கு தள்ளியிருக்கிறது.

ஹராமான உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் இந்த நிறுவனங்களுக்கு இலட்சக் கணக்கான பணத்தைப் பெற்றுக் கொண்டு பத்வாவை All Ceylon Muslim Clerics' சபை வழங்கி வருகின்றது.


இது முஸ்லிம்கள் மத்தியில் திட்டமிட்டு ஹராத்தை திணிக்கும் இஸ்லாத்தின் எதிரிகளின் சூழ்ச்சிக்கு All Ceylon Muslim Clerics சபை பலியாகி வருவதை வெளிச்சம் போட்டு காட்டி வருகின்றது.

2010 ஹலால் மாநாடு என்ற போர்வையில் பன்றி இறைச்சியை தயாரிக்கும் முன்னணி நிறுவனமான கீல்ஸ் ஒரு மாநாட்டை ஒழுங்கு செய்திருக்கிறது. அதற்கு All Ceylon Muslim Clerics' சபை பிரதான பாத்திரமேற்றிருக்கிறது.

UTO/Educonsult என்ற ஒரு அமைப்போடு சேர்ந்து All Ceylon Muslim Clerics' சபை இந்த மாநாட்டை நடாத்த விருப்பதாக பத்திரிகைகளில் விளப்பரப்படுத்தப் பட்டிருந்தன. இம் மாநாட்டில் பங்கு பற்றுபவர்களிடமிருந்து ரூபா 6000 முதல் 16000 வரை அறவிடப்படவிருப்பதாகவும் அந்த விளம்பரங்களில் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஹலால் ஹராம் என்ற ஷரீஅத்தின் கட்டளைகள் வர்த்தக மயமாக உருவாகி வரும் அபாயத்தையும், மேற்கத்தைய ஏகாதிபத்திய சக்திகள் , மிகவும் தந்திரமாக அவர்களின் பொருட்களை விற்பனை செய்து கொள்வதற்கான ஒரு சந்தையாக இஸ்லாமிய ஷரீஆவை பயன்படுத்துவதையும் இந்த சதிக்கு All Ceylon Muslim Clerics சபை தொடர்ந்து பலியாகி வருவதையும் அவாதனிக்கக் கூடியயதாக இருக்கின்றது.

அதேவேளை, அல்லாஹ்வின் சட்டத்தை, ஹலால் அங்கீகாரத்தை, பத்வாவாகபணத்திற்கு விற்பனை செய்வதை இஸ்லாமிய ஷரீஆ அங்கீகரிக்கின்றதா என்ற கேள்வி பலராலும் எழுப்பப்பட்டு வருகின்றது. (Badurkalam/Ends)

அவ்லியாக்கள் பெயரால்.......! நாம் இந்துக்களா ? முஸ்லிம்களா ?

அவ்லியாக்கள் பெயரால்


அரங்கேறும் அவதாரங்கள் !

அவ்லியாக்களின் பெயரால் மக்கள் கண்மூடித்தனமான அனாச்சாரங்களை ஆங்காங்கே அரங்கேற்றி வரும் அவலங்களை நம்மைச்சுற்றிலும் பார்த்து வருகிறோம். குருட்டுத்தனமான பக்தியால் விவஸ்தையே இல்லாமல் அவ்லியாக்களின் இலக்கணம் தெரியாமல் யார் யாரையெல்லாம் அவ்லியாக்கள் (இறை நேசர்கள்) என கொண்டாடி வருகிறார்கள் தெரியுமா?

01. வாயில் போட்டு மென்ற வெற்றிலையால் பிள்ளை வரம் கொடுப்பவர் அவ்லியா !

02. எச்சிலைத் தண்ணீரில் துப்பி வேண்டியது நடக்க துப்பிக்கொடுப்பவர் அவ்லியா !

03. பச்சைத் தலைப்பாகை,நீண்ட அங்கி, ஜபமாலை சகிதம் உலா வருவோர் அவ்லியா!

04. மாந்திரீகம்,இஸ்மு,தகடு,தாவீஸ்,இலை,பீங்கான் என ஏமாற்றும் தங்ஙள்கள் அவ்லியா!

05. தர்காக்களின் ஆதீன கர்த்தா, அவ்லியாவின் வாரிசு என வசூலுக்கு வருவோர் அவ்லியா!

06. செய்கு முஹ்யித்தீன், நாகூர் நாயகம் பரம்பரை என தம்பட்டம் அடிப்போர் அவ்லியா!

07. குழி தோண்டி (துணி நெய்யும் குழியில்) கஃபாவை காண்பவர் அவ்லியா (பீரப்பா)

08. காமமோகம் கொண்டு பெண்களை தனிஅறையில் சந்தித்து முரீதுகொடுப்பவர் அவ்லியா!

09. பெண்களையும் ஆண்களையும் தடவிக்கொடுத்து ஓதி ஊதுபவர் அவ்லியா!

10. நிர்வாண கோலமாக அலையும் சன்னியாச பரதேசிகள் அவ்லியாக்கள் !

11. கஞ்சா அபின் போன்ற போதைப் பொருட்களை பயன்படுத்துவோர் அவ்லியாக்கள்!

12. இரவெல்லாம் கேளிக்கைகளிலும், சல்லாபங்களிலும் ஈடுபட்டுப் பகலிலே பத்தினிகளாக நடிப்போர் அவ்லியாக்கள்!

இவர்கள் பெயரை உச்சரித்துக் கொண்டு சில போலிப்பேர்வழிகள் ஆங்காங்கே கடற்கரையில், வாய்க்கால் ஓரங்களில், காடுகளில், மேடுகளில், பாலைப் பெருவெளிகளில் கல்லறைகளைக் கட்டிக் கொண்டு உள்ளே இருப்பவர் ‘அவ்லியா’ எனக் கூறி கட்டுக்கதைகளையும், கனவுக்காட்சிகளையும் அரங்கேற்றி மக்களை நம்ப வைத்து போலிச்சாமியார்;களையும் மிஞ்சுமளவுக்கு போடும் ஆட்டங்கள் அப்பப்பா சொல்லவே வாய் கூசுகிறது.

மனிதப்புனிதர்கள், மகான்கள், மெய் நிலை கண்ட ஞானிகள் எனச் சித்தரிக்கப்படுவோரின் பெயர்களைப் பார்த்தாலே இவர்கள் யார்? இவர்களின் வண்டவாளங்கள் என்ன என்பது தெரிந்து விடும்.

அவ்லியாக்களின் பெயர்களைப் பாரீர்!

01. பீடி மஸ்தான் (பீமா பள்ளி)

02. கட்டி மஸ்தான் (பொறையார் )

03. சட்டி மஸ்தான் (பொதக்குடி)

04. சங்கிலி மஸ்தான் (கோயம்பத்தூர்)

05. மோனகுரு மஸ்தான் (ஊமைப்பிள்ளை அவ்லியா-தொண்டி)

06. குரங்கு மஸ்தான். தஞ்சை

07. அனுமான் அவ்லியா தஞ்சை

08. அணிப்பிள்ளை அவ்லியா தஞ்சை

09. பாஸ்போர்ட் அவ்லியா தஞ்சை

10. கப்ரடி அவ்லியா (திருவிதாங்கோடு)

11. காட்டு பாவா அவ்லியா (தக்கலை அருகில், பேட்டை )

12. வேப்ப மரத்து அவ்லியா (கோட்டார்)

13. மாமரத்து அவ்லியா (நீலவெள்ளி)

14. மரத்தடி அவ்லியா (கோட்டார் )

15. மரக்கட்டை அவ்லியா (சென்னை ராயபுரம்)

16. மோத்தி பாவா (சென்னை,அண்ணா சாலை)

17. மிஸ்கீன் அவ்லியா நெல்லை

18. பச்சை அவ்லியா நெல்லை

19. பக்கீர் மஸ்தான். நெல்லை

20. பிச்சை அவ்லியா (திலி பேட்டை)

21. அப்துர் ரஸ்ஸாக் மஸ்தான். (திருவனந்தபுரம்)

22. மலுக்கர்; மஸ்தான் (மஞ்சேரி, கேரளா)

23. மைதீன் பிச்சை அவ்லியா (பொட்டல் புதூர்)

24. ஆத்தங்கரை அவ்லியா (ஆத்தங்கரை)

25. அக்கரைப்பள்ளி அவ்லியா (குளச்சல்)

26. அம்பலத்து அவ்லியா (திருவிதாங்கோடு)

27. மக்கட்டி லெப்பை அவ்லியா (திருவிதாங்கோடு)

28. காத்தாடி அவ்லியா (ஆளூர்)

29. பல்லாக்கு அவ்லியா (கீழக்கரை)

30. ஸந்தூக் அவ்லியா திருவை)

31. கால்துட்டு அவ்லியா (காயல் பட்டணம்)

32. சாலை சாஹிப் அவ்லியா (புது ஆயங்குடி)

33. நிர்வாண அவ்லியா(மஜ்தூப் வலி)(காயல் பட்டணம்)

34. ஹயாத் அவ்லியா (கோட்டார்)

35. ஹயாத்தே அவலியா (திட்டு விளை),

36. பிரேக் ஷா அவ்லியா (கொடிக்கால பாளையம்)

37. ஹாஸ் பாவா அவ்லியா (கொடிக்கால பாளையம்)

38. கேத்தல் பாவா அவ்லியா (புதுப்பட்டினம்)

39. பட்டாணி சாஹிப் அவ்லியா (திலி பேட்டை)

40. கோட்டு மூஸா அவ்லியா (கூத்தா நல்லூர்)

41. மொட்டைப பக்கீர் அவ்லியா (சிவகங்கை)

42. கோதரிசா அவ்லியா (பொட்டல் புதூர் அருNயுள்ள மலை)

43. அப்பா ராவுத்தர் அவ்லியா (கூத்தா நல்லூர்)

44. படேஷா ஹஸ்ரத் அவ்லியா (மஞ்சக்குப்பம்)

45. வண்ணம் தீட்டும் அவ்லியா (நக்ஷபந்த் அவ்லியா)

46. கோயுன் பாபா அவ்லியா (ஆடுகளின் தந்தை, துருக்கி)

47. தக்கடி அப்பா அவ்லியா (பஸீர் வலி மேலப்பாளையம்) புலிகள்

பாம்புகளிடையே வந்து காப்பாற்றியவர்)

48. ஜஹான்ஷா அவ்லியா (கொடிக்கால் பாளையம்)

49. ஒட்டகாஸ் அவ்லியா (உடன்குடி)

50. காட்டப்பா அவ்லியா ”

51. புளியடி அவ்லியா ”

52. காட்டானை அவ்லியா (வேதாளை)

53. கப்படா சாஹிப் அவ்லியா (காரைக்கால்)

அப்பப்பா அவ்லியாக்களில் தான் எத்தனை எத்தனை ரகங்கள்! எத்தனை எத்தனை வகைகள்! இவர்களெல்லாம் எப்படி முளைத்தார்கள்? எங்கிருந்து வந்தார்கள்?

இவர்கள் யார் ? எந்த ஊர் ? எப்போது பிறந்தார்கள் ? எப்போது இறந்தார்கள் ?

இங்கே எதற்கு வந்தார்கள் ? இவர்கள் மக்களுக்காக செய்த சேவைகள் என்னென்ன? மார்க்கத்திற்காக என்ன தியாகம் செய்தார்கள் ?

சமுதாயம் அடைந்த பயன்கள் என்ன ? இவர்கள் செய்த சாதனைகள் என்ன ?

இவர்கள் குர்ஆன் நபிவழியில் வாழ்ந்தவர்களா?

என மக்களைக் கேட்டால் மக்கள் திருதிரு என்று முழிக்கிறார்கள். இவர்கள் யார்? எப்படிப்பட்டவர்கள்? இவர்களின் முகவரி என்ன?

என்பதையெல்லாம் தெரியாமல் கூடு,கொடி, உரூஸ், சந்தனக்கூடு என கண்மூடித்தனமாக இந்த போலிகள் பெயரால் ஆண்டுதோறும் விழாக்கள் எடுத்து அமர்க்களப்படுத்துகிறார்கள்.

இந்த விஞ்ஞான யுகத்தில் வாழும் அறிவு ஜீவிகளான நாம் இந்தப் போலி மஸ்தான்கள், அவ்லியாக்களை நம்பலாமா? இநதப்போலிகளுக்கு நாம் பலியாகலாமா? நம்பி மோசம் போகலாமா ? உரூஸ்கள், கந்தூரிகள், யானை ஊர்வலங்கள் என நடத்தலாமா? என நாம் சற்று சிந்தித்தாலே இவையெல்லாம் போலியானவை., மார்க்கத்திற்கு எதிரானவை என நாம் உடனே ஒரு முடிவுக்கு வந்துவிடலாம்.

அப்படியானால் மக்களை ஏமாற்றும் சாய்பாபாக்கள், சந்திர பாபாக்கள், பிரேமானாந்தக்கள், ஜான்கள், ஆனந்த ராஜ்கள் பின்னால் செல்லும் மக்களுக்கும் நமக்கும் என்ன தான் வேற்றுமை? திருப்பதிக்கும்,திருச்செந்தூருக்கும், வேளாங் கண்ணிக்கும் செல்லும் பக்தர்களுக்கும் நமக்கும் என்னதான் வித்தியாசம்?

இஸ்லாத்தை பின்பற்றும் முஸ்லிம்களே! அறிவுக்கேற்ற மார்க்க்கமாக உலகே ஒப்புக்கொண்டிருக்கும் இஸ்லாத்தில் இப்படிப்பட்ட போலித்தனங்களை, பேதைத்தனங்களை அனுமதிக்கலாமா? பின்பற்றலாமா ? சற்று சிந்தித்துப் பாருங்கள்.

மதத்தின் பெயரால் ஏமாற்றும் கபோதிகளின் களியாட்டங்கள் நாளிதழ், வார இதழ், மாத இதழ், தொலைக்காட்சிகள்,இன்டெர்நெட் போன்றவற்றில் அம்பலப்படுத்தும் போலித்தனங்களை நாள் தோறும் கண்டு வருகிறோமே! இன்னுமா இந்த அறியாமை ? இந்த மாயையிலிருந்து விடுபடவேண்டாமா? என உங்கள் மனதைக் கேட்டுப்பாருங்கள்.

இதோ பாருங்கள் !

நம் மக்களின் அறியாமையை !

யானைக்கு ஒரு தர்ஹா!

குதிரைக்கு ஒரு தர்ஹா!!

கழுதைக்கு ஒரு தர்ஹா!!!

கழிப்பறைக்கு ஒரு தர்ஹா!!!!

வியப்பாக இருக்கிறதா ?

ஆம். இவையெல்லாம் உண்மை தான்!

நெல்லை மாவட்டம் பொட்டல் புதூரில் ‘மைதீன் பிச்சை’ யென்ற யானைக்கு தர்ஹாகட்டிவழி படுகிறார்கள். பாக்கியம் பெற்ற யானை!

கன்னியா குமரி மாவட்டம் திருவிதாங்கோட்டில் முஹ்யித்தீன் பள்ளிவாசல் எதிரிலுள்ள கப்ருஸ்தானத்தில் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் கப்ரடி அவ்லியாவின் பக்கத்து கப்ரு, அவர் பயணம் செய்த குதிரையின் சமாதி! இதற்கும் ஆண்டு தோறும் விழாக்கள் எடுக்கின்றனர். கொடுத்து வைத்த குதிரை!

திருநெல்வேலி பேட்டையிலிருந்து சேரன்மாதேவி செல்லும் வழியில் ஓரிடத்தில பெயர் தெரியாத அவ்லியா ஒருவர் கழுதையில் பயணம் செய்து வந்தார். திடீரென்று ஒருநாள் அது இறந்து விடவே அங்கேயே அடக்கம் செய்துவிட்டார்கள். இன்று அதற்கும் வழிபாடு நடக்கிறது. அதிர்ஷ்டக்காரக் கழுதை!

கேரளாவில் கொல்லம் முல்லக்கல் அருகே ஒருகழிப்பிடம் (டாய்லெட் கட்டிடம்) இருக்கிறது. அது இன்று ஒரு தர்ஹாவாக ஆராதனை செய்யப்பட்டுவருகிறது. அங்கே சென்ற கப்ரு பக்தரான ஆலிம் பேராசிரியர் ஒருவர் மக்கள் கூட்டமாகச் செல்வதைப் பார்த்து தானும் சென்று தமது பங்காக ஸியாரத்தை மிகவும் பயபக்தியோடு முடித்துக்கொண்டு திரும்பினார். பின்னர் அது பற்றி விசாரித்த போது தான் அது அவ்லியாவின் கப்ரல்ல. அது மக்கள் செல்லும் ஒரு பொதுக் கழிப்பறை எனத் தெரிய வந்தது. தரிசனத்துக்குரிய தர்ஹா!என்னே மக்களின் மதியீனம்.

இதில் படித்தவர்களும் பலியாகிறார்களே! புரிதாபமாக இருக்கிறது. பக்திப்போதையில் எதையுமே விசாரிக்காமல் கண்மூடித்தனமாக செய்யும் வழிபாடுகளின் இலட்சணத்தைப் பார்த்தீர்களா?

தொடரும்..

நன்றி-அல்பாக்கவி.கம்

Labels: அநாச்சாரம்

Thanks; Ilmul Islam

No Religious Thinking in Islam ..நாம் இந்துக்களா ? முஸ்லிம்களா ?.(Islamic Ideology Vs Islamic Religion)


இதோ ஒரு கணம் சிந்திப்பீர்! நாம் இந்துக்களா ? முஸ்லிம்களா ?

01. அங்கே சிலை வணக்கம் : இங்கே கப்ரு வணக்கம்

02. அங்கே தேர் திருவிழா : இங்கே சந்தனக்கூடு

03. அங்கே பால் அபிசேகம் : இங்கே சந்தன அபிசேகம்... See more

04. அங்கே சாம்பல் திருநீறு : இங்கே சந்தனத் திருநீறு

05. அங்கே சிலைக்குப்பட்டுப்புடவை : இங்கே கப்ருக்குப்பட்டுத்துணி

06. அங்கே பூமாலை பத்தி ஆராதனை : இங்கேயும் பூமாலை பத்திகள்

07. அங்கே குத்துவிளக்கு : இங்கேயும் குத்து விளக்கு

08. அங்கே அம்மன் முன் சாஷ்டாங்கம்: இங்கே கப்ரின்முன் சாஷ்டாங்கம்.

09. அங்கே கோயிலைச் சுற்றி வருதல் : இங்கே கப்ரை சுற்றி வலம்வருதல்

10. அங்கே சர்க்கரை கற்கண்டு பிரசாதம்: இங்கே சர்க்கரை பாயாசம் தபர்ருக்

11. அங்கே நேர்ச்சை காணிக்கை : இங்கேயும் நேர்ச்சை காணிக்கை

12. அங்கே சாமியிடம் வேண்டுதல் : இங்கே கப்ரிலே வேண்டுதல்

13. அங்கே பிள்ளைக்காக பூஜை : இங்கே பிள்ளைக்காகப் பிரார்த்தனை

14. அங்கே குழந்தைக்காக தொட்டில் : இங்கேயும் தர்காவில் தொட்டில்

15. அங்கே திருப்பதி மொட்டை : இங்கேயும் தர்காவில் மொட்டை.

16. அங்கே மயிலிறகு மந்திரம் : இங்கேயும் மயிலிறகு ஆசீர்வாதம்

17. அங்கே தீட்சை : இங்கே முரீது, பைஅத்

18. அங்கே மஞ்சள் கயிறு தாலி : இங்கே தங்கம்-கருக மணித்தாலி

19. அங்கே பக்திப்பாடல் : இங்கே மவ்லிது ராத்தீபு பைத்து

20. அங்கே சுப்ரபாதம் : இங்கே ஞானப்பாடல்.

21. அங்கே ஜோதிடம், ஜாதகம் : இங்கே பால்கிதாபு, இஸ்முகிதாபு

22. அங்கே நல்ல நாள், ராவு காலம் : இங்கே நஹ்ஸு நாள்,ராவு காலம்.

23. அங்கே மார்கழி மாதம் பீடை : இங்கே ஸஃபா மாதம் பீடை

24. அங்கே கழுத்தில் கையில் தாயத்து : இங்கேயும் கழுத்தில்,கையில்தாவீசு

25. அங்கே சாமி ஆடுவார் : இங்கே பே ஆடும்.

26. அங்கே சாமி அருள் வாக்கு : இங்கே அவ்லியா கனவில் அருள்வாக்கு.

27. அங்கே தீமிதி உண்டு : இங்கேயும் முஹர்ரம் மாதத்தில் தீமிதி உண்டு.

28. அங்கே திதி திவசம் : இங்கே ஃபாத்திஹா,கத்தம்.

29. அங்கே சரஸ்வதி , லட்சுமி படங்கள் : இங்கே நாகூர், அஜ்மீர் படங்கள்,

30. அங்கே துவஜா ரோகனம் கொடி : இங்கே நாகூர் அஜ்மீர் கொடியேற்றல்.

31. அங்கே வீட்டு முகப்பில் ஓ மந்திரம் : இங்கே வீட்டில் 786 மந்திரம்.

32. அங்கே விநாயகர் ஊர்வலம் : இங்கே மீலாது,யானை ஊர்வலம்.

Thanks;  Ilmul Islam's  Ends/

Friday 14 May 2010

ஆன்மீக அகீதாவும், அரசியல் அகீதாவும்!

01) மறுமையின் விடயங்களை கற்பதன் அடிப்படை அம்சமாக அகீதாவின் ஆன்மீகம் தொடர்பான பகுதி அமைகின்றது. அதேபோல லௌகீக விடயங்களை கற்பதன் அடிப்படையாக அகீதாவின் அரசியல் பரிமாணம் அமைகின்றது. ஒவ்வொரு விடயம் தொடர்பான சிந்தனையும் அடிப்படை அகீதாவிலிருந்தே தோற்றம் பெறுகின்றது. அந்த சிந்தனையிலிருந்து மேலும் பல உப சிந்தனைகள் தோற்றம் பெருகின்றன. அந்த சிந்தனை மறுமை தொடர்பாக அமையுமானால் அது அகீதாவின் ஆன்மீகப்பகுதியிலிருந்தே எழுகின்றது. மாறாக அந்த சிந்தனை இவ்வுலக வாழ்க்கை தொடர்பாக அமையுமானால் அது அகீதாவின் அரசியற்பகுதியிலிருந்து எழுகின்றது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இறுதிதீர்ப்புநாள் விவகாரங்கள், நற்கூலி வழங்குதல், தண்டனை வழங்குதல், வணக்க வழிபாடுகள்; அல்லது இவற்றுடன் சம்பந்தப்பட்ட விடயங்களான மறுமை நாளின் விபாPதங்கள், அல்லாஹ்வின் தண்டனை குறித்த எச்சரிக்கைகள், அல்லாஹ்வின் வெகுமதியை பற்றிய சுபசோபனங்கள் போன்ற விடயங்கள் அகீதா எமக்கு எடுத்தியம்பும் ஆன்மீகம் தொடர்பான பகுதியாகும். அதே நேரத்தில் மனிதனின் இவ்வுலக விவகாரங்களுடன் தொடர்புடையதாக ஒரு சிந்தனையோ, சட்டமோ அமையுமானால் அது அகீதாவின் அரசியல் தொடர்பான வழிகாட்டலாகும். அதாவது இறை சட்டங்கள், நன்மை, தீமை என்ற வழிகாட்டல்கள், வியாபரம், பங்குடமை, வாடகை, திருமணம், வாரிசுரிமை, உம்மத்திற்காக அமீர் ஒருவரை நியமித்தல், அவருக்கு கட்டுப்படுதல், அவர் நேர்வழியில் ஆட்சி செய்ய உதவுதல், நீதி தொடர்பான சட்டங்கள், ஜிஹாத் போன்ற அனைத்து விடயங்களும் இஸ்லாமிய அகீதாவின் அரசியல் பரிமாணத்திலிருந்து தோற்றம் பெற்றுள்ளதை இலகுவாக விளங்கிக்கொள்ளலாம்.


02) கிருஸ்தவ மதமானது வெறுமனவே ஆன்மீக அகீதாவிலிருந்தே தோற்றம் பெற்றுள்ளது. ஏனெனில் அது எடுத்தியம்பும் சிந்தனையும், சட்டங்களும் மறுமை விவகாரங்களுடன் மட்டுமே சம்பந்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இன்று உலகில் மேலோங்கியுள்ள முதலாளித்துவ தத்துவத்தின் அடிப்படை அகீதா அரசியல் பரிமாணத்தை மட்டும் கொண்ட அகீதாவாகவே விளங்குகிறது. ஏனெனில் அதிலிருந்து உருவாகும் சிந்தனையும், சட்டவிதிகளும் உலக விவகாரங்களுடன் மாத்திரமே சம்பந்தப்படுகிறது. உதாரணமாக முதலாளித்துவக்கொள்கையிலிருந்து தோன்றியிருக்கும் சுதந்திரம், விடுதலை, ஜனநாயம், திறந்த பொருளாதாரக்கொள்கை போன்ற கொள்கைகளை நாம் காணலாம்.

சோஷலிசம், கம்யூனிசம் என்பனவும் அரசியல் அகீதாவாகவே விளங்குகிறது. ஏனெனில் இக்கொள்கைகளிலிருந்து உருவாகும் சிந்தனையும், விதிகளும் உலகியல் விவகாரங்களுடன் மாத்திரமே சம்பந்தப்படுகிறது. உதாரணமாக தனியுரிமையை கட்டுப்படுத்தல் அல்லது அதை முற்றாக கட்டுப்படுத்தல், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம், அரசற்ற வாழ்வியலை ஏற்படுத்தல் போன்றவற்றை நாம் நோக்கலாம். எனினும் இஸ்லாமிய அகீதா மாத்திரமே ஒரே சமயத்தில் ஆன்மீக அகீதாவாகவும் அரசியல் அகீதாவாகவும் விளங்குகின்றது. ஏனெனில் இஸ்லாம் எடுத்தியம்பும் சிந்தனைகளும், விதிகளும் மறுமை பற்றியும் இவ்வுலக வாழ்க்கை பற்றியும் தெளிவுபடுத்துகின்றது.

03) ஆன்மீகத்தை மாத்திரம் கொண்டுள்ள அகீதா இவ்வுலக விவகாரங்கள் தொடர்பான எத்தகைய எண்ணக்கருக்களையும் தோற்றுவிப்பதில்லை. ஏனெனில் அது இந்த வாழ்வுக்கு முன்னிருந்த விடயங்கள் பற்றியும், இந்த வாழ்வுக்கு பிறகு வரவிருக்கும் விடயங்கள் பற்றியுமே பேசுகிறது. அது இந்த உலகியல் விடயங்களுடன் எவ்வித தொடர்பும் இல்லாது இருப்பதால் எத்தகைய அரசியல் அகீதாவையும் (கொள்கையையும்) ஆன்மீக அகீதாவை மாத்திரம் கொண்ட சமுதாயத்தின் மீது பிரயோகிக்க முடிகிறது. எனினும் அரசியலை மாத்திரம் விளக்கும் அகீதாவை பொருத்த வரையில் அது இவ்வுலக வாழ்க்கை தொடர்பான நோக்கையும், அதிலிருந்து உருவாகியுள்ள எண்ணக்கருக்களையும் கொண்டுள்ளது. அது இவ்வுலக வாழ்க்கையின் அனைத்து விவகாரங்கள் தொடர்பான எண்ணக்கருக்களையும் விதிகளையும் உருவாக்குகிறது. எனவே மனிதனுடைய வாழ்க்கையை அதனது விதி முறைகளுக்கு ஏற்ப வடிவமைகிறது. அது தனது அகீதாவிலிருந்து எழுகின்ற சிந்தனையை அடிப்படையாக் கொண்டு இந்த வரையரைகளை ஏற்படுத்துகிறது. எனவே இந்த அரசியல் அகீதாவினை வேறொரு அரசியல் அகீதாவினை கொண்டிருக்கும் சமூகத்தில் அமுல்படுத்துவது முற்றிலும் சிரமமான காரியமாகும்.

அவ்வாறு அமுல்படுத்த வேண்டுமானால் அந்த சமூகம் பின்பற்றும் அகீதாவிலிருக்கும் குறைபாடுகளை சுட்டிகாட்டி இந்த அகீதாவிலுள்ள நிறைகளை விளங்கப்படுத்தி அதனை அந்த சமூகம் முற்றுமுழுதாக ஏற்றுக்கொள்வதன் மூலமோ, அல்லது பாரிய பலப்பிரயோகத்தினு}டாகவோதான் சாதிக்க முடியும். இதனாலேயே மேற்குலகிற்கு எளிதாக கொங்கோவினை காலனித்துவம் செய்ய முடிந்த போதிலும் அல்ஜீரியாவினை பலப்பிரயோகத்தை பிரயோகித்தும் கூட காலனித்துவம் செய்து தொடர்ந்தும் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியாமல் போனது.

04) முதலாளித்துவத்தை எடுத்துக் கொண்டால் அது இவ்வுலக வாழ்க்கை தொடர்பான ஒரு முழுமையான பார்வையை கொண்டுள்ளது. அத்துடன் அதனது முக்கிய இலக்காக இவ்வுலகில் மனிதன் அதியுச்ச இன்பமடைவதையும், அதனை அடைவதற்கான அடிப்படை அடிச்சுவடாக சுதந்திரம் என்ற தனது எண்;ணக்கருவையும் கொண்டுள்ளது. அதாவது கொள்கைத்தேர்விற்கான சுதந்திரம், பொருளுடமைக்கான சுதந்திரம், தனிமனித சுதந்திரம், கருத்து சுதந்திரம் என பல்வேறு சுதந்திரங்களை மனிதனுக்கு பெற்றுத்தர வேண்டும் என இக்கொள்கை கருதுகிறது. அதே போன்று ஷோசலிசம் சமூகத்தின் பரிணாம மாற்றத்தினை சமூக முன்னேற்றத்தின் அடிப்படை அம்சமாக நோக்குகிறது. அதாவது ஒரு குறித்த காலகட்டத்தில் நிலவும் சமூக முரண்பாடுகள் வளர்ச்சி கண்டு அந்த முரண்பாட்டிற்கான தீர்வாக புதியதொரு சமூக நிலை தோற்றுவிக்கப்படுகின்றது. இவ்வாறு மனித வாழ்வை முரண்பாடுகளுக்கிடையிலான பரிணாம வளர்ச்சியாக ஷோசலிசம் நோக்குகிறது. எனவே சமூகத்தில் பரிணாம வளர்ச்சி ஏற்படுவதற்கு நடைமுறையில் நிலவும் முரண்பாடுகளில் முன்னேற்றம் ஏற்படுவதை வரவேற்க வேண்டும். தற்சமயம் முரண்பாடுகள் காணப்படாதிருந்தால் சமூகத்தில் பரிணாம வளர்ச்சி ஏற்படுவதற்காக முரண்பாடுகள் தோற்றுவிக்கப்பட வேண்டும் எனவும் ஷோசலிசம் கருதுகிறது.

அதேவேளை இஸ்லாமும் இவ்வாழ்க்கை தொடர்பான முழுமையான பார்வையைக்கொண்டுள்ளதுடன், ஹலாலையும், ஹராமையும் மக்களது செயற்பாடுகளின் அளவுகோள்களாக நியமித்துள்ளது. மனிதன் ஷரிஆவிற்கு முழுமையாகக் கட்டுப்பட்டு வாழ்வது இந்த அளவுகோள்களை நடைமுறைப்படுத்தும் வழிமுறையாக இஸ்லாம் வகுத்துள்ளது. எனவே எவையெல்லாம் தடை செய்யப்பட்டுள்ளதோ அதிலிருந்து முற்றாக விலகியும், எவையெல்லாம் செய்யும் படி ஏவப்பட்டுள்ளதோ அதனை அமுல் செய்யும் படியும் இஸ்லாம் பணிக்கிறது.

05) மேற்குலகு முஸ்லிம் பூமிகளில் கலாச்சார hPதியான ஆக்கிரமிப்பினை முன்னேடுத்த போது இவ்வாழ்க்கை தொடர்பாக இஸ்லாம் கொண்டுள்ள பார்வையை விமர்சிப்பதை அவர்கள் இலக்கு வைத்தார்கள். அவர்கள் கழா கத்ர் தொடர்பில் கேள்வி எழுப்பினார்கள். நபித்துவத்தின் மீதும், ஸஹாபாக்கள் மீதும் கேள்வி எழுப்பினார்கள். தற்கால நடைமுறையில் உள்ள பிரச்சினைகளை தீர்ப்பதில் ஷரிஆவிற்கு ஆளுமை உள்ளதா என்பதில் நம்பிக்கையீனத்தை ஏற்படுத்த முயற்சித்தார்கள்.இதன் அடிப்படையில் ஜிஹாத் தொடர்பான சட்டங்களை சுட்டிக்காட்டி இஸ்லாம் வன்முறையின் அடிப்படையில் அமைந்தது என இனங்காட்டி அது இந்த நாகாPகமடைந்த உலகிற்கு பொருத்தமானது அல்ல என நிரூபிக்க முற்பட்டனர். பலதாரமணம், விவாகரத்து தொடர்பாகவும் பல சந்தேகமான கேள்விகளை எழுப்பினார்கள். ஷரிஆவினை அதே வடிவில் எல்லாக்காலங்களிலும் அமுல்படுத்த முடியாது என்பது தொடர்பான பலகீனமான கருத்துக்களை சில இஸ்லாமிய மார்க்க அறிஞர்களைக் கொண்டே தோற்றுவித்தார்கள். பொதுநலன்(அல் மஸாலிஹ் அல் முர்ஸலா), நலனடைதல் (ரியாஅத் அல் மஸ்லஹா), வழக்காறுகளை அமுல் செய்தல் (தஹ்கீம் அல் உர்ஃப்), காலத்துக்கேட்ப விதிகளை மாற்றுதல் போன்ற இமாம்கள் மத்தியில் கருத்து முரண்பாடுகளுடன் காணப்படும் உசூல்களை, உறுதியான ஷாPஆ ஆதாரங்களுக்கு பதிலாக பயன்படுத்தி முஸ்லிம்கள் தமது செயல்களுக்கான அளவு கோலாக ஷரிஆவினை முழுமையாக பயன்படுத்துவதற்கு பதிலாக இலாபநோக்கை பயன்படுத்துவதற்கு து}ண்டினார்கள். இதன் விளைவாக முஸ்லிம்கள் தமது அளவுகோலாக ஹலால், ஹராம் கொள்வதை தவிர்த்து படிப்படியாக வேறு அளவுகோள்களை உள்வாங்க ஆரம்பித்தனர். சில அறிஞர்கள் எங்கெல்லாம் பலன் தெரிகிறதோ, அல்லாஹ்வின் சட்டமும் அதிலிருக்கிறது என்ற கொள்கைகளை முன்வைக்கத் தொடங்கினார்கள்.

மேற்குலகு இஸ்லாமிய பூமியை தமது நாசகார வேலைகளைக் கொண்டு ஆக்கிரமித்த வேளையில் அவர்கள் தமது அகீதாவை அங்கு அமுல்படுத்த முயற்சித்தனர். அதாவது மதத்தையும், வாழ்க்கையையும் வௌ;வேறாக பிரிக்கின்ற தமது அகீதாவினை முஸ்லிம் உலகில் நிறுவி, வாழ்வை ஹராம், ஹலால் அடிப்படையில் நோக்குவதற்கு பதிலாக இலாப நோக்கை அடிப்படையாக் கொண்டு நோக்கும் போக்கை அறிமுகப்படுத்தினார்கள்.

இதன் விளைவாக இலாபநோக்கை பல முஸ்லிம்கள் தமது வாழ்வின் அடிப்படையாக எடுத்துக்கொண்டனர். இதன் விளைவாக முஸ்லிம்களிடையே ஒருசில விடயங்களில் மாத்திரமே ஹராம், ஹலால் என்ற அளவுகோள் பயன்படுத்தப்பட்டது.

06) 1954ம் ஆண்டுகளில் இஸ்லாமிய உலகில் புதியதொரு வாழ்வியல் முறையை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் வளர்ச்சியடைந்தது. இந்த சிந்தனை தேசியவாதத்தையும், சோஷலிசத்தையும் பற்றி முஸ்லிம்கள் சிந்திப்பதற்கு வழிவகுத்தது. முதலாளித்துவத்தின் இலாபநோக்கையும், சோஷலிசத்தின் பரிணாம கோட்பாடு, சரித்திர வளர்ச்சியும் முன்னேற்றமும் போன்ற எண்ணக்கருக்களை பரிசீலிக்க முஸ்லிம் உலகு தயாரானது. உண்மையில் முதலாளித்துவத்தையும், சோஷலிசத்தையும் ஒன்றாக கலந்த ஒரு கலவை பற்றி சிந்திக்கப்பட்டது. ஆரம்பத்தில் இது ஒரு பிரபலமான சிந்தனையாக மட்டும் இருந்ததேயொழிய இதனை யாரும் அமுல்படுத்தவில்லை. எனினும் காலப்போக்கில் உருவான புதிய சூழலில் முதலாளித்துவத்தின் பயன் என்ற எண்ணக்கரு இந்த இடத்தை நிரப்பியது. மேற்குலகின் திட்டமிட்ட முயற்சியினாலும், பரிதொரு வழிமுறையைக்கொண்டு முற்றுமுழுதாக சமூதத்தை மாற்றவேண்டும் என்ற சிந்தனை இஸ்லாமிய உலகில் மேலோங்கியிருந்ததாலும், மேற்குலகின் முன்னேற்றத்துடன் இணைந்து தாமும் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் வலுப்பபெற்றிருந்ததாலும் இஸ்லாமிய உலகு வேறொரு வாழ்வியல் முறைக்குள் தள்ளப்பட்டது. இவ்வாறாக, இந்நிலை தொடர்ந்து 1964ம் ஆண்டுகளில் பெரும்பாலான புத்திஜீவிகளும், தலைவர்களும் முதலாளித்துவச்சிந்தனையை அமுல்படுத்த முன்வந்ததுடன், பொதுமக்களும் வழமைக்கு மாறாக இதனால் பாதிப்படைந்தனர்.

07) இதே வேளை இஸ்லாமிய அகீதாவோ வெறுமனே தனிமனிதனால் காவிச் செல்லப்படுகின்ற ஆன்மீக அகீதாவாக மாத்திரம் இருந்து வந்ததுடன் அது வாழ்வியல் ஒழுங்கில் தலையிடும் சக்தியை இழந்திருந்தது. எனவே வாழ்க்கை தொடர்பாகவும், வாழ்வின் வடிவமைப்பு தொடர்பாகவும் விளக்குகின்ற இஸ்லாமிய அகீதாவின் அரசியல் பரிமாணம் முஸ்லிம் உலகில் நடைமுறைப்படுத்தப்படாது செயலிழந்து போனதால் வாழ்வியல் விவகாரங்களுக்கான முஸ்லிம்களின் அளவுகோளாக ஹராம், ஹலால் கொள்ளப்படாது, இலாப நோக்கே முஸ்லிம்களின் வாழ்வின் இலட்சியமாக மாறியது.

08) எனவே முஸ்லிம்களின் உள்ளத்திலே, குறிப்பாக இஸ்லாமிய உலகிலே ஏற்பட்டுள்ள இந்நோயினை குணப்படுத்துவதற்கு இஸ்லாமிய அகீதாவின் அரசியல் பரிமாணத்தை காத்திரமான முறையில் முஸ்லிம்களுக்கு விளக்குவதுடன் அதனது ஆன்மீக பகுதியினை அதனுடன் இணைக்க வேண்டும். இதனை மேற்கொள்வதற்கு இஸ்லாமிய அகீதாவினை இந்த லௌகீக வாழ்க்கையுடன் இணைந்து சிந்திப்பதற்கு மக்களை து}ண்டவேண்டும். மேலும் அல்லாஹ்வின் மீதான ஈமானுடனும், குர்ஆனை ஏற்றுக்கொள்வதுடனும் முஹம்மது(ஸல்) அவர்களை ஏற்றுக்கொள்வதுடனும், அவரது வழிமுறைகளை பின்பற்றுவதுடனும், அவர் கொண்டு வந்த ஷரிஆவின்படி முஸ்லிம்கள் வாழ்வதுடனும் இதனை நாம் சம்பந்தப்படுத்தி தெளிவு படுத்த வேண்டும். அவ்வாறு செய்யும்போது முஸ்லிம்கள் தமது வாழ்வுக்கான அளவுகோள் என்ன என்பதை இனம்கண்டு கொள்ள உதவும். ஓரு முஸ்லிமின் வாழ்வின் அளவுகோள் தற்போது நடைமுறையிலுள்ள இலாபநோக்கோ, பரிணாம கோட்பாடோ அல்ல, மாறாக அல்லாஹ்வால் தீர்மானிக்கப்பட்ட ஹராம், ஹலால் மாத்திரம்தான் அவர்களின் அளவுகோளாகும் என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்கள்.

உண்மையில் அகீதா என்பது மிக துல்லியமான, மிக உறுதியான நம்பிக்கையாகும் (அல் தஸ்தீகுள் ஜாஸீம்) உறுதிபாடு இல்லாவிடின் அது அகீதாக கொள்ளப்படாது. எனவே தயக்கமற்ற, மயக்கமற்ற இந்த நம்பிக்கைக்கான அடிப்படைகளை உறுதி செய்வதில் சிறிதளவேனும் மயக்கமுள்ள தரவுகளை, ஆதாரங்களை அடிப்படையாக ஏற்றுக்கொள்ள முடியாது. அவற்றைக்கொண்டு அகீதாவை வரையறுக்கவும் முடியாது. இந்த விடயத்தை பொருத்தவரை மாற்று தீர்வுக்கள் எதுவுமில்லை. உதாரணமாக, சில அறிவிப்புக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், அதிலே சிறிதளவில் மயக்கம் காணப்பட்டாலும் அது அகீதாவின் பகுதியாக கொள்ளப்படுவதில்லை. இஸ்லாத்தில் குறித்த ஒரு விடயம் அனுமதிக்கப்பட்டது என கூறப்பட்டால் உடனே அது அகீதாவாகக் கொள்ளப்படாது. மாறாக அது ஒரு சாதாரண நம்பிக்கையாகவே கொள்ளப்படும். உறுதியாக நம்பிக்கை கொள்வது எனும்போது அது குர்ஆனை நாம் நம்பிக்கை கொள்வதற்கு ஒத்தது. குர்ஆன் உறுதியாக நம்புவது என்பது அது அல்லாஹ்வின் வேதமாகும் என உறுதியாக நம்புவதாகும். ஆகவே அது மாத்திரம்தான் ஏற்றுக்கொள்ளத்தக்கது ஏனெனில் அது அல்லாஹ்வின் வேதமாகும். இந்த விடயத்தை பொருத்தவரையில் குர்ஆன் ஏற்றுக்கொள்ளத்தக்கது, ஏனையவை ஏற்றுக்கொள்ளத்தக்கவை அல்ல என கூறினால் அது உறுதியான நம்பிக்கையாக கொள்ளப்படாது. மாறாக அது சாதாரண நம்பிக்கையாகவே கொள்ளப்படும். அதேபோல ஹதீஸ்களை உறுதியாக நம்பிக்கை கொள்ளுவது என்பது, (தரமான அறிவிப்புக்களையுடைய ஹதீஸ்களாக அவை இருந்தால்) ரஸ}ல் (ஸல்) அவர்களின் ஹதீஸ்கள் (சொல், செயல், அங்கீகாரம்) மாத்திரமே ஏற்றுக்கொள்ளக்கூடியது என நம்புவதாகும். ஏனெனில் அவையும் அல்லாஹ்வின் து}தாகும்.

மாறாக ஹதீஸ்கள் ஏற்றுக்கொள்ளத்தக்கவை, ஏனையவை ஏற்றுக்கொள்ளத்தக்கவையல்ல எனக்கூறினால் அது உறுதியான நம்பிக்கையாக கருத முடியாது. சாதாரண நம்பிக்கையாகவே கொள்ளப்படும். எனவே அகீதா என்பது உறுதிப்பாடுடன் தொடர்ப்புபட்டது. உறுதிப்பாடு குறைவாக இருந்தால் அது உறுதியான நம்பிக்கையாக கொள்ளப்படாது.

ஷரிஆவினை அகீதாவுடன் தொடர்புபடுத்தும்போது, ஓருவர் ஷரிஆ இலாபநோக்கு கருதியே வந்துள்ளது எனக்கருதுவாரானால் அவர் இலாபநோக்கு என்ற அடிப்படையைக்கொண்டு ஷரிஆவினை நோக்க முற்படுவதால் அவரது கருத்து இலாபநோக்கு என்ற எண்ணக்கருவினால் பாதிப்படைந்துள்ளது. எனவே ஷரிஆவினை அகீதாவுடன் அவர் தொடர்புபடுத்தும் விதத்தில் தவறு ஏற்பட்டு விடுகின்றது.

ஷரிஆவின் சட்டங்களானது, ஷரிஆவின் ஆதாரங்களைக்கொண்டே தீர்மானிக்கப்படுகிறது என்ற கருத்தை முன்வைப்பதன் மூலம் இந்தத்தவறான கருத்திலிருந்து அத்தகையோரை பாதுகாக்கலாம். அதாவது ஷரிஆவிற்கு ஆதாரம் அல்லாஹ்விடமிருந்து வஹியாக வந்தவையே ஒழிய இலாபநோக்கு அல்ல.

உதாரணமாக இந்தக்காலத்திற்கு ஷரிஆ சட்டங்கள் பொருத்தமானவையாக தெரியவில்லை, இன்றைய வளர்ச்சிபெற்ற உலகிற்கு இலாபநோக்கை அடிப்படையாக்கொண்ட விதிகள், அல்லது நடைமுறையிலுள்ள சட்டங்களே பொருத்தமானது என ஒரு முஸ்லிம் நம்புவாரானால் அவரது அகீதாவில் தவறிருப்பதுடன் அவரது பார்வையிலும் கோளாறு இருக்கின்றது.

அல்லாஹ்வையும், ரஸ}லையும் நம்பிக்கை கொள்ளும் விடயத்துடன் அவரது சிந்தனை முரண்படுகிறது என்பதை தெளிவுபடுத்துவதைக்கொண்டு அவரை நேர்வழிப்படுத்த வேண்டும். அல்லாஹ்வின் வேதம் எல்லாக்காலங்களுக்கும் பொருத்தமானது என அல்லாஹ்வின் வஹியில் அறிவிக்கப்பட்டுள்ளமையை அவருக்கு தெளிவுபடுத்த வேண்டும். இதனை அவர் ஏற்றுக்கொண்டால் இலாபநோக்கு என்ற சிந்தனையுடன் ஷரிஆவை இணைப்பதிலுள்ள தவறினை உணர்த்த நாம் முற்பட முடியும். அதாவது அல்லாஹ் கூறியுள்ள ஹராம், ஹலாலைக்கொண்டு மக்களின் வாழ்வை ஒழுங்குபடுத்துவதிலும், இலாபநோக்கு என்ற எண்ணக்கருவை கொண்டு வாழ்வை ஒழுங்குபடுத்துவதிலும் முரண்பாடு எதுவுமில்லை என அவர் கூறினால், அதற்கு விடையாக ஹராம், ஹலால் என்ற அளவுகோளுக்கு ஷரிஆ ஆதாரங்களே அடிப்படையாக உள்ளன, மாறாக பயன் அல்ல என்ற விடயத்தை விளக்குவதன் மூலம் அந்தச்சிந்தனையை நாம் திருத்த முடியும். (‘விடுதலை’/Ends)