Pages

Saturday 28 July 2012

நாகூர் தர்ஹா வாசலில் தர்ஹாவை கண்டித்து தெருமுனைப் பிரச்சாரம்

பிரபல நாகூர் தர்ஹா வாசலில் தர்ஹாவை கண்டித்து தெருமுனைப் பிரச்சாரம் – நாகூர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளை சார்பாக கடந்த 22/12/2011 அன்று நாகூர் தர்ஹா வாசலில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் சகோதரர் யூசுப் MISC அவர்கள் “இணை வைத்தல் மாபெரும் பாவம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அல்லாஹ்ம்துல்லாஹ்..

Tuesday 24 July 2012

தாலிபான் முஸ்லிம் மதகுரு “யுசுப் அல் கா்ளாவி” பெண்ணின் கையை பிடிக்கவில்லையா?

தாலிபான் முஸ்லிம் மதகுரு “யுசுப் அல் கா்ளாவி” பெண்ணின் கையை பிடிக்கவில்லையா? Br.  மன்சூரின் மழுப்பலுக்கு பதில்

இஸ்லாத்தின் கொள்கைகளைப் பொருத்தமட்டில் ஆண்கள், பெண்கள் என்ற இரு பாலாருக்கும் அவர்களின் ஒழுக்க விழுமியங்களை மிகவும் அழகாகவும், தெளிவாகவும் எடுத்தியம்பும் ஒரு மார்க்கமாகும்.

இந்த மார்கத்தை பின்பற்றக் கூடியவர் அறிஞராக இருந்தாலும், பாமர பொது மகனாக இருந்தாலும் அவர் நபியவர்களின் வாழ்வை தனது வாழ்வில் நடைமுறைப்படுத்த வேண்டும் இல்லா பட்சத்தில் எவ்வளவு பெரிய அறிஞனாக அவர் தன்னை காட்டிக் கொண்டாலும் அல்லாஹ்வின் பார்வையில் வெரும் செல்லாக் காசாகத்தான் அவர் பார்க்கப்படுவார்.

அந்த வகையில் “யுசுப் அல் கா்ளாவி” என்பவர் ஜமாத்தே இஸ்லாமி, இஹ்வானுல் முஸ்லிமீன், போன்ற இயக்கத்தவர்களினால் மதிக்கப்படக் கூடிய ஒரு மனிதர்.

More readings click here>>>

Monday 23 July 2012

வட்டியும் வட்டிக்கு துனைபோண முஸ்லிம் மதகுருக்கள் சபையும்


1/

வட்டியும் வட்டிக்கு துனைபோண இலங்கை முஸ்லிம் மதகுருக்கள் சபையும்.

இலங்கை முஸ்லிம் மதகுருக்கள் சபை தலைவர் றிஸ்வி வியாபாரம் அம்பலத்தில்

சிலிங்கோ இலாப பங்கீட்டு நிறுவனம் முஸ்லிம்களின் பலகோடி ரூபாய்களுக்கு மோசடி இழைத்துள்ளது. இதற்கு யார் காரணம்?

இலங்கை முஸ்லிம் மதகுருக்கள் சபையின் ஹலால் பத்வாவை நம்பி பலகோடி ரூபாய்களை சிலிங்கோ இலாப பங்கீட்டு நிறுவனத்தில் வைப்பிலிட்ட அப்பாவி முஸ்லிம்கள் பரிதவிப்பு!

இன்று பணத்தை இழந்தோர் நிர்க்கதியற்று நடுத்தெருவில்...!! 

பல்லாயிரம் ரூபாய்களை சம்பளமாகப் பெற்று சிலிங்கோ இலாப பங்கீட்டு நிறுவனத்தில் ஆலோசகர்களாக கடமை புரிந்த
இலங்கை முஸ்லிம் மதகுருக்கள் சபை அங்கத்தவர்கள் ஆழ்ந்த மௌனம்!

குற்றவாளிகளும் அதற்குத் துணைபோனவர்களும் தண்டிக்கப்பட வேண்டும்!

றிஸ்வி முதலாளிக்கும் செலின்கோ நிறுவன உறிமையாளர் லலித் கொதலாவளையின் மணனைவிக்கும் சிங்கப்பூரில் நடந்த சந்திப்பை சிலிங்கோ இலாப பங்கீட்டு நிறுவனத்தில் வைப்பிலிட்ட அப்பாவி முஸ்லிம்களுக்கு றிஸ்வி முதலாளி தெளிவுபடுத்துவாறா.

இந்த றிஸ்வி முதலாளியின் இறட்டை வேடம் அம்பளத்திற்கு வரும் நாள் தொளைவிள் இல்லை……………

எமது நாட்டின் பெரும்பான்மை இனத்தைச் சார்ந்த ஒரு இணையத்தளம் (musalmanuwa>>>). எமது சமூத்தையு;
இலங்கை முஸ்லிம் மதகுருக்கள் சபையும் எ(மது) முஸ்லிம் மதகுருக்களையும் மிகவும் கீழ் தரமாக சாடியுள்ளது. இவை அனைத்துக்கும் காரணம் இந்த றிஸ்வி முதலாலியின் வியாபாரமே முஸ்லிம் சமூகத்தை காட்டிக்கொடுத்த இந்த எட்;ப்ப றிஸ்வி றாஜினாமா செய்வாறா………….. (SriMuslimLeaks)

2/

Dr Mn..... Rf......: wrote:
an acid test- will they or won’t they?

Date: Sat, 2 Jun 2012 10:46:40 -0700
From: deposit_cps@yahoo.com
Subject: Open Letter to All Ceylon Muslim Clerics' Association (ACMCA)
To: shamz4@hotmail.com

CEYLINCO PROFIT SHARING DEPOSITORS’ ASSOCIATION-(Reg GA 2604)
No.17, Sumanarama Road, Mt. Lavinia- email: deposit_cps@yahoo.com-0778546385
                        AN OPEN LETTER TO ALL CEYLON JAAMAIATHUL-ULAMA
 
30th May , 2012
 
TO:
Al-Haj Rizwie Mufthi
President
All Ceylon Muslim Clerics' Association
Colombo 10

Assalamu-Alaikkum
 
It is with great regret that we write this letter. Despite our numerous requests and pleads All Ceylon Muslim Clerics' Association (ACMCA)  has not made any attempt to resolve the problem of Depositors’ of Ceylinco Profit Sharing Investment (CPSICL) Company, a one time well known Islamic financial institution in Sri Lanka.


Since September 2009 we have met with ACMCA Board members on three occasions and at all such meetings it was agreed that ACMCA will actively get involved in resolving matters pertaining to the Depositors of CPSICL. However up to now ACMCA has not taken any constructive measures nor made any attempts to find a solution to the on-going crisis of depositors’ of CPSICL. As a result poor depositors are struggling continuously.
 
ACMCA’S Propaganda in promoting CPSICL from its’ inception

It is a well known fact that several members (Clerics) of ACMCA promoted CPSICL on the air at ‘Sahar’ time during the month of Ramdhan. ACMCA members spoke about the CPSICL and advised Muslims to invest in the Company. It was reported that large amount money has been spent by the Company for promotion and advertising using members if ACMCA.


 In certain situations members of ACMCA participated at the opening ceremonies of branches in different parts of the island along with the Management of CPSICL. After the openings of branches these Clerics made speeches which attracted poor Muslims to the deposit their money with this Company. Also every CPSICL branch carry a name board of the Shariah Board who had been appointed by the ACMCA.


 The Muslim community knew little about the owners of the Company but they had a high respect and trusted our religious leaders who are there to guide the community in right path.

Negligence and ignorant from the Shariah Board appointed by ACMCA


The ACMCA appointed a Shariah Board to the CPSICL to monitor all its’ transaction and ensure that these transactions were done in accordance with the Islamic financing norms. (Initial members of the Shariah Board were Late Niyas Moulavi, Yusoof Mufthi, Abdul N’asar Moulavi, Salahhuddin Moulavi, Fazil Farook Moulavi and Laffar Moulavi). It is a regret that the Shariah Board did not perform their duties which they ought to have done and acted with negligence, ignorance and in some instances with conflict of interest. Following are some non-compliance acts caused by the Shariah Board.


01. According to the Finance Act of 1988 no institution shall obtain money from public unless such institution has been registered under the Central Bank. CPSICL is not an institution which was registered under the Finance Act and CPSICL has violated the basic law of the country. Thus it is unbelievable that ACMCA has promoted a company which has violated the basic rule of the country.


02. In certain cases CPSICL did not invest in a manner which will bring them a return by halaal means. The CPSICL granted a loan to a leading night club in Colombo and interest has been received by the CPSICL. This was in turn paid back to depositors as profit earned. This is a clear misconduct of the Shariah Board on whom the Muslim depositors have kept faith to receive halaal earnings.


03. One of the duties and responsibilities of the Shariah Board Shall be ‘ Endorsing and validating relevant documentations including contracts, agreements or other legal documentations used in executing transaction’. (extracted from People Leasing annual report-shariah compliance).It is noted that CPSICL granted loans to certain companies where are non-existant legally.


04. Most of the investment made or loans given by CPSICL were to companies within the Ceylinco Group. There is no clear evidence (even today) that these Ceylinco
companies are carrying out its’ business in a Shariah compliance manner. The appointed Shariah Board approved all these transactions and were witnessed to them as well.


05. It was also noted that a few members of the Shariah Board while serving in the Shariah Board to the CPSICL, had obtained personal loans. We believe the ACMCA must have set up a certain code of ethics on it’s Shariah Board members but under normal circumstances and understanding when you have entered in to transactions for personal benefits with another, you will not be able to carry out your obligations with objectivity and independence for the benefit of a third party.


It would have been much better and would have helped the Muslim community if the Shairah Board had play their role with more responsibility and due care because :
a. Muslim Clerics advice is vital and they are executing almighty God’s concept. So there cannot be any room for misappropriation. If Shariah Board members were not fully skilled to carry out God’s concept, they should not have played around such a serious task. For instant, when one of depositor inquired about the issue from one of the Shariah Board member and a moulavi (from Puttalam) stated that they are not supposed to open the cupboard at CPSICL and see what is happening. Dear Risvi, is this God’s concept of Islamic financing is such a simple concept. There are so many methods in accounting and auditing environment to trace any misappropriation including to see “ what is in the cupboard?” as mentioned by the above Shariah board member. This great concept is valid even today and is able to fit in all internal control requirements that exist in Islamic Banking environment.


b. Secondly all the members of the Shariah Board were paid a fee for each sitting by the CPSICL. This is again poor depositors’ money. So members of the Shariah board have morale duty and responsibility to execute their function in proper manner


 
ACMCA’s Withdrawal from CPSICL and it’s Shariah Board
During the meetings we had with you and your other members, ACMCA was trying to emphasise that the ACJU and it’s members had withdrawn from the CPSICL’s Shariah Board. However we observed that ACJU had issued a warning letter to CPSICL only on the 29th October 2008 by which time all the damages had been done.


You also mentioned that there was a newspaper notice published (in English)stating that ACMCA had withdrawn it’s Shariah Board from CPSICL. So far we have met over 1,000 depositors and have not come across a single depositor who had seen this withdrawal notice published by ACMCA. Moreover most of the Muslim brothers and sisters read Tamil news paper and it is very unfair for them to publish such vital notice only in English news paper. Also ACMCA should have published notice in all mosques in the island as they now do when a halaal certificate is been cancelled for any product/outlet. This is a better way of notifying the community which is a best communication mode even in any centuries.

Now former members of CPSICL’s Shariah Board are busy with other Islamic Banks
Now ACJU members who served in the CPSICL’s Shariah Board are now serving in the Shariah Boards other Islamic financial institutions/Banks’. ACJU and its leadership have failed to investigate any acts of negligence and inappropriate duties carried out by those Shariah Board members when they were serving at CPSICL. Instead these members are promoting other Islamic banks leaving the affected depositors of CPSICL to the dust.


The other question that begs an answer is, are these Shariah Board members capable enough to advise Islamic Banking in Sri Lanka and to what extent the general public can rely on them and other Islamic banks being properly monitored in accordance with Shariah guidelines. ACJU should have conducted an inquiry on these former Shariah Board members before allow them to function in other Islamic Banks/Institutions.
 
Suffering of Poor depositors
Today our poor depositors are suffering extremely, having deposited all their hard earned money with CPSICL. Amongst us there are widows, retired persons, parents who saved money for their daughters’ nikah, their children’s educations, with all their aspirations coming to a standstill. Moreover, there are Mulsim Orpahanges, elders’ homes and even funds belonging to certain mosques in rural areas. All these depositors only knew ACJU Ulamas. They deposited their money because of ‘Fatwas’ given by members of and not because they knew or had faith in Lalith Kotelawala.


The suffering of these depositors is depressing and heart rendering. If you are willing to join us, we can take you to all parts of the island and show you the extent that they depended on the money deposited with CPSICL and the faith they had on Ulamas’ ‘Fatwa’ and Islamic financing. Widows have no means of living while what their husband had left for them have been lost. Retired families are struggling as their lifetime earnings have been lost. Parents are unable to give their daughters in marriage. This has lead to a social dilemma of the community for which ACJU is also partially responsible .

Number of requests on ACJU
We as a committee requested ACJU to actively get involved in our effort to get our money back. But up to now no solid action has been taken by the ACJU in this regard.
There are other Islamic banks in Sri Lanka and we requested on a number of occasions that discussion should be held with these banks to rescue CPSICL. There was no effort to take this suggestion forward as well.
We also requested you to hold a meeting with Ceylinco chairman Lalith Kotelalwala about this crisis. Because your Shariah members went with Lalith Kotelawala when each and every branch of CPSICL was opened. But you failed to meet Lalaiht Kotelawal on behalf of depositors as well.
It is a known fact that deputy Minister Hisbullah together with his wife owes Rs. 140m to CPSICL. The money was obtained in 2004 from CPSICL. We requested you to contact Kattankudy Jaamiathul Ulama and bring deputy minister Hisbullah to the table for discussion. Because he is a politician who has been elected by people and has responsibility towards the public. ACJU has a right to persuade the deputy Minister on this matter as ACJU is the governing body of the Muslim community. ACJU should be able to come strongly whenever our community or section of community is affected. However you have turned down this request, instead your ACJU members participated and accompanied Dr. Zakir Nahik to Hisbullah’s residence in Kattankudy for fund raising function.


View this document on Scribd
 
Dear Mufthi, we all would like to see the concept of Islamic Finance develop in this great country. In this country which Adam (AS) stepped foot on when he was sent down to earth, any prospective Islamic ideal is possible. What is needed is the right direction and guidance by a supreme governing body like ACJU.


However, we have not given up our fight in getting our money back. We know we earned this money through halaal earnings and insha-allah we will get our money back.
We will take every measure possible in this regard, including legal.
However it is pathetic that ACJU is still silent on this matter. May Allah grant you and ACJU members the courage to come forward and help suffering depositors and be the true voice of Muslims in Sri Lanka.
 
‘Charity extinguishes sin as water extinguishes fire’-Prophet Mohamed SAWS (=Piss Be Upon Him)
 
Wassalam
 
Dr. Rf..........
 

அகில இலங்கை முஸ்லிம் மதகுருக்கள் சபை தலைவர் இரகசிய பேச்சுவார்த்தை…………..


1/





அகில இலங்கை முஸ்லிம் மதகுருக்கள் சபை தலைவர் எம்.ஐ.எம். ரிஸ்விக்கும் இலங்கைகான அமெரிக்கத் தூதுவர் பெற்ரீசியா புட்டேனிஸ்க்கும் இடையிலான இரகசிய பேச்சுவார்த்தை…………..



அகில இலங்கை  முஸ்லிம் மதகுருக்கள் சபை அன்மையில் இலங்கையில் இஸ்ரேல் தூதுவராலயம் திறக்கப்படுவதற்கு எதிறாக கண்டித்து பத்திரிகைகளில் அரிக்கை ஒன்றினை வெளியிட்டதை இநத நாட்டுமக்கள் அனைவரும் அறிந்தது. 



இந்த கண்டன அறிக்கையை பார்த்த எமது முஸ்லிம் சமூகம் பெருமிதமடைந்தது. 


இதனைத் தொடர்ந்து இலங்கைகான அமெரிக்கத் தூதுவர் பெற்ரீசியா புட்டேனிஸ் முஸ்லிம் மதகுருக்கள் சபை தலைமையகத்திற்கு விஜயம் செய்து முஸ்லிம் மதகுருக்கள் சபை தலைவர் ரிஸ்வியுடன் இரகசிய பேச்சுவார்த்தை ஒன்றில் ஈடுபட்டார். பின்னர் முஸ்லிம் மதகுருக்கள் சபை தலைவர் அவர்களை அமெரிக்கத் தூதுவரhலயத்துக்கு வருகைதருமாறும் வேண்டுகோள் விடுத்தார். 


அமெரிக்கத் தூதுவர் பெற்ரீசியா புட்டேனிஸ் முஸ்லிம் மதகுருக்கள் சபை தலைவர் ரிஸ்வி பார்த்து (You are a Modernize Muslim Leader) என்ற வார்த்தை பிரயோகித்தார். இதற்கு எ(மது) முஸ்லிம் மதகுருக்கள் சபை தலைவர் பெருமிதமடைந்தார்.


அமேரிக்கு யூத உணவு தயாரிப்பு நிறுவனங்களுக்கு Mc Donald , KFC

ஹலால் சான்றிதல் வழங்கிய பெருமை இநத முஸ்லிம் மதகுருக்கள் சபை தலைவர்ச்சாறும்.  


Taliban Cleric யூசுப் அல் கர்லாவி அவர்கள் கூட அமேரிக்கு யூத உணவு தயாரிப்பு நிறுவனங்களுக்கு தடைவிதித்திருக்கிறார். 


இந்த றிஸ்வி, Taliban Cleric யூசுப் அல் கர்லாவி அவர்களை சந்தித போது நாம் எமது நாட்டிலும் உங்களது பத்வாக்களைத்தான் முன் உதாரணமாக கொள்கிறோம் என்று அவறையும. ஏமாற்றினார். 


அமெரிக்கத் தூதுவருடன் இடம் பெற்ற இரகசிய பேச்சுவார்த்தையை தொடர்ந்து பம்பலப்பிடி சென் பீட்டர்ஸ் கல்லூரிக்கு முன்பாக இஸ்ரேலிய தூதுவராலயத்தின் வீசா பிரிவு ஆரம்பிக்கப்ட்டது. இஸ்ரேலிய தூதுவராலயம் இலங்கையில் அமைவதை முழு இலங்கை முஸ்லிம் சமூகமும் ஆண்டாண்டு காலமாக எதிர்த்துவந்தனர் பல அரசாங்கங்கள் முயற்சி செய்தும் இலங்கையில் இஸ்ரேலிய ஸ்தூதுவராலயம் திரப்பது சாத்தியப்படவில்லை. ஆனால் தற்போது இந்த முஸ்லிம் மதகுருக்கள் சபை றிஸ்வி ஆதரவுடன் அமெரிக்கத் தூதுவராலயம் வெற்றிகரமாக இதனை மேற்கொண்டுவிட்டது. 


இந்த முஸ்லிம் மதகுருக்கள் சபை தலைவர் எம்.ஐ.எம். ரிஸ்வி தன்னுடைய பொருளாதார நலனுக்காக முழு முஸ்லிம்சமூகத்தின் உணர்வுகளையும் குழிதோன்டி புதைத்துவிட்டார். யார் இந்த றிஸ்வி ?…இவரின் பின்னனி; என்ன?………காசுக்காக எதையும செய்யத் துனிந்தவர்……..


டாக்டர் சாகிர்னாயிக் இலங்கை வந்தபோது காசு;காக இவர் சாகிர்னாயிக் அவருடைய நிகழ்ச்சிக்கு அனுசரனை வழங்கிய ஷேக் யமானி முன்னிளையில் தன்னை ஓரு தவ்ஹித் ஜமாத் ஆதரவாளனாக காட்டி டாக்டர் சாகிர்னாயிக் அவர்களை ஏமாற்றினார்.




பாகிஸ்தானிய அமைப்புக்களுடன் இனைந்து காதியானி எதிர்புப் பிறச்சாறத்தில் இடுபட்டு தன்னை பிறபல்யப்படுத்த முனைந்து இரகசியமா இலங்கையில் இயங்கி வந்த காதியானி அமைப்புக்கு அரச அங்கிகாறம் பெற்றுக் கொடுத்தார். 




துற்போது அமெரிக்கத் தூதுவராலயத்துடம் இனைந்து இஸ்ரேலிய தூதுவராலயம் இலங்கையில் அமைவதற்கு அங்கிகாறத்தைப் பெற்றுக் கொடுத்தார். (via FB, Sri Muslim Leaks)

 Read all articles from here>>>

Wednesday 18 July 2012

Fake Fatwa Factory & Day Time Robbery (போலி பத்வாவும் & பகற்கொள்ளையும்!)

1/
அகில இலங்கை முஸ்லிம் மதகுருக்கள் சபை தலைவர் றிஸ்விக்கு ஒரு திறந்த மடல்!
 

சிலிங்கோ இலாப பங்கீட்டு நிறுவனம் முஸ்லிம்களின் பலகோடி ரூபாய்களுக்கு மோசடி இழைத்துள்ளது.   இதற்கு யார் காரணம்?


அகில இலங்கை முஸ்லிம் மதகுருக்கள் சபையின் ஹலால் பத்வாவை நம்பி பலகோடி ரூபாய்களை சிலிங்கோ இலாப பங்கீட்டு நிறுவனத்தில் வைப்பிலிட்ட அப்பாவி முஸ்லிம்கள் பரிதவிப்பு!
 

இன்று பணத்தை இழந்தோர் நிர்க்கதியற்று நடுத்தெருவில்...!! 


பல்லாயிரம் ரூபாய்களை சம்பளமாகப் பெற்று சிலிங்கோ இலாப பங்கீட்டு நிறுவனத்தில் ஆலோசகர்களாக கடமை  புரிந்த உலமா சபை அங்கத்தவர்கள் ஆழ்ந்த  மௌனம்!

குற்றவாளிகளும் அதற்குத் துணைபோனவர்களும் தண்டிக்கப்பட வேண்டும்!


29 மே 2012
.
மதகுரு ரிஸ்வி அவர்கள்
தலைவர்,
அகில இலங்கை முஸ்லிம் மதகுருக்கள் சபை (ACMCA)
கொழும்பு 10


அஸ்ஸலாமு அலைக்கும்


இந்தக்கடிதத்தை நாம் மிகுந்த கவலையுடன்  எழுதுகின்றோம். எமது எண்ணற்ற மரியாதை மற்றும் வேண்டுதல்கள் இடம்பெற்ற போதும் ஸ்ரீலங்காவின் இஸ்லாமிய வங்கி என நன்கு அறியப்பட்ட சிலிங்கோ இலாப பங்கீட்டு கம்பனியில் முதலீடு செய்தவர்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு அகில இலங்கை முஸ்லிம் மதகுருக்கள் சபை (All Ceylon Muslim Clerics' Association-ACMCA) இதுவரை எத்தகைய முயற்சிகளையும் செய்யவில்லை.


கடந்த 2009 செப்டம்பர் மாதம் முதல் நாம் அகில இலங்கை முஸ்லிம் மதகுருக்கள் சபையின் நிர்வாக குழுவை  பல தடவைகள் சந்தித்துள்ளோம்.


அப்போதெல்லாம் மேற்படி இலாப பங்கீட்டில் முதலீடு செய்தவர்களின் பிரச்சினைகளை தீர்க்கும் விடயத்தில் அவர்கள் சார்பாக அகில இலங்கை முஸ்லிம் மதகுருக்கள் சபை முனைப்புடன் செயற்படும் என ஏற்றுக்கொள்ளப்பட்டது.


ஆனாலும் இதற்கான எந்த வித அடிப்படை அழுத்தங்களையோ  முயற்சிகளையோ  மேற்படி முதலீட்டாளர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக அகில இலங்கை முஸ்லிம் மதகுருக்கள் சபை முன்னெடுக்கவில்லை. இதன் காரணமாக அப்பாவி முதலீட்டாளர்கள் தொடர்ச்சியாக  போராடி தமது பணத்தை மீளப்பெறுவதற்கு போராடிக் கொண்டிருக்கிறார்கள்.


சிலிங்கோ இலாப பங்கீட்டு பிரிவும்; அகில இலங்கை முஸ்லிம் மதகுருக்கள் சபையின்  Fake பத்வா பிரச்சாரமும்


ரமழான் மாதத்தின் ஸஹர் வேளையில் இலங்கை வானொலி முஸ்லிம் சேவையூடாக அகில இலங்கை முஸ்லிம் மதகுருக்கள் சபையின் பல அங்கத்தவர்கள் சிலிங்கோ இலாப பங்கீட்டு பிரிவை ஆர்வமூட்டி பிரச்சாரம் செய்தார்கள் என்பது மிகவும் தெரிந்த விடயம். அகில இலங்கை முஸ்லிம் மதகுருக்கள் சபை (ACMCA) சபை அங்கத்தவர்கள் சிலிங்கோ இலாப பங்கீட்டு  பிரிவைப்பற்றி விளம்பரப்படுத்தியதோடு முஸ்லிம்களை அதில் முதலீடு செய்யும்படி ஆலோசனையும் வழங்கினார்கள்.  பல சந்தர்ப்பங்களில் ;சிலிங்கோ இலாப பங்கீட்டு  பிரிவின் கிளைகளை நாடு தோறும் திறப்பதற்காக அகில இலங்கை முஸ்லிம் மதகுருக்கள் சபை அங்கத்தவர்கள்  சிலிங்கோ இலாப பங்கீட்டு பிரிவின் முகாமைத்துவத்துடன் கலந்து கொண்டனர்.


இவற்றை திறந்து வைத்த பின் முஸ்லிம் மதகுருக்கள் ஆற்றிய உரைகள் அப்பாவி முஸ்லிம்கள் இந்த நிறுவனத்தின் மீது நம்பிக்கை வைத்தனர். பொதுவாக முஸ்லிம் சமூகம் வங்கி உரிமையாளர்கள் பற்றி ஓரளவே தெரிந்திருந்த நிலையில் முஸ்லிம் மதகுருக்கள்/சமயத்தலைவர்கள் சமூகத்தை சரியான பாதையில் கொண்டு செல்லக்கூடியவர்கள் என அவர்கள் மீது நம்பிக்கையும் வைத்திருந்தனர்.


சரியாக இயங்காத முஸ்லிம் மதகுருக்கள் சபையின் ஷரீயா பிரிவு


சிலிங்கோ இலாப பங்கீட்டு நிறுவனம் தனது பணமாற்றுதல்களில் இஸ்லாமிய வங்கி நடைமுறையை பேணுகிறதா  என்பதை கவனிப்பதற்காக   அகில இலங்கை முஸ்லிம் மதகுருக்கள் சபை ஷரீயா பிரிவை நியமித்தது.


இதன் அங்கத்தவர்களாக முஸ்லிம் மதகுருக்கள்; (மறைந்த) Br. நியாஸ், Br. யூசுப், Br. அப்துல் நாசர், Br. சலாஹுத்தீன், Br. பாசில் பாரூக், Br. லாபிர் ஆகியோர் இடம் பெற்றனர்).


கவலைக்குரிய விடயம் என்னவென்றால் மேற்படி ஷரீயா பிரிவு தமது கடமையை சரிவர நிறைவேற்றவில்லை என்பதுடன் இது விடயங்களில் அறிவீனமாகவும், கவலையீனமாகவும் நடந்து கொண்டது என்பதே.


ஷரீயா பிரிவால் ஏற்பட்ட மறுக்க முடியாத சில விளைவுகள் பின்வருமாறு


01. 1988ம் ஆண்டின் நிதிச்சட்டத்தின் படி மத்திய வங்கியில் பதியப்படாத எந்தவொரு நிறுவனமும் பொது மக்களிடமிருந்து பணத்தை பெற முடியாது. சிலிங்கோ இலாப பங்கீட்டு பிரிவை நிதி சட்டத்தின்படி மத்திய வங்கியில் பதிவு செய்யப்படவுமில்லை என்பதுடன் சிலிங்கோ இலாப பங்கீட்டு பிரிவை நாட்டின் அடிப்படை சட்டத்தை மீறியுள்ளது. நாட்டின்அடிப்படை சட்டத்தை மீறிய ஒரு நிறுவனத்தில் பணத்தை வைப்பிலிடுமாறு அகில இலங்கை முஸ்லிம் மதகுருக்கள் சபை (ACMCA) பத்வா வழங்கியதன் மூலம் இந்த சட்டவிரோத செயலுக்கு அதரவளித்து உதவி செய்து இந்நாட்டின் சட்டப்படி குற்றமிழைத்திருக்கிறது. வளர்த்தது என்பது ஆச்சர்யமாக உள்ளது.


02. முஸ்லிம் மதகுருக்கள் சபையால் ஹலால் பத்வா வழங்கப்பட்ட சிலிங்கோ இலாப பங்கீட்டு  பிரிவு பல சந்தர்ப்பங்களில் முஸ்லிம்களின் பணத்தை ஹலாலான வர்த்தக நடவடிக்கைகளில் முதலீடு செய்யாமல் ஹராமான வர்த்தக நடவடிக்கைகளில் முதலீடு செய்திருப்பது அம்பலத்திற்கு வந்திருக்கிறது.


முஸ்லிம்களால் ஹலால் என நம்பி வைப்பிலிடப்பட்ட பணத்தை சிலிங்கோ இலாப பங்கீட்டு பிரிவு கொழும்பிலுள்ள பிரபல இரவு விடுதிகளில் (Night Club) களில்  முதலீடு செய்து அவற்றிலிருந்து அதிகளவு இலாபங்கள் பெற்றிருக்கிறது.இந்த ஹராமான பணம் உலமா சபையின் பத்வாவை நம்பி வைப்பிலிட்ட முதலீட்டாளர்களுக்கு அவர்களின் இலாபமாகவும் வழங்கப்பட்டிருக்கிறது.


இதிலிருந்து ஹலாலான உழைப்பை விரும்பும் நம்பிக்கையாளர்களான முஸ்லிம்கள் மீது முஸ்லிம் மதகுருக்கள் சபையின் ஷரீயா பிரிவும் துரோகம் செய்துள்ளது என்பது மிகத்தெளிவாக தெரிகிறது.


03. முஸ்லிம் மதகுருக்கள் சபையின் ஷரீயா பிரிவின் கடமைகளில் ஒன்றுதான் கொந்தராத்து மற்றும் உடன்படிக்கைகள் அல்லது விசேட  பண மாற்றுதலில் சட்டப்படியான ஏனைய ஆவணங்கள்  போன்றவற்றை பொருத்தமான  ஒப்பு நோக்குதலும் நிர்ணய படுத்தலுமாகும்.  (ஷரியாவுக்கு பொருத்தமான மக்கள் குத்தகை வருடாந்த அறிக்கையிலிருந்து பெறப்பட்டது)


04. சிலிங்கோ இலாப பங்கீட்டு பிரிவின் மூலம் முதலீடு செய்யப்பட்ட அல்லது கடன் வழங்கப்பட்டவை சிலிங்கோ குழுமத்தின் கம்பனிகளாகும்.  இந்த சிலிங்கோ கம்பனிகள் ஷரீயா வழிமுறைக்கெற்ப தமது வியாபாரங்களை கொண்டுள்ளதா என்பதற்கு (இன்று வரை) எந்த ஆதாரமும் இல்லை. மாறாக முஸ்லிம் மதகுருக்கள் சபையின் ஷரீயா பிரிவு இத்தகைய அனைத்து பண மாற்றுதல்களையும் அனுமதித்ததுடன் அவற்றுக்கு சாட்சியாகவும் இருந்துள்ளது.


05. மேலும் இங்கு குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால் சிலிங்கோ இலாப பங்கீட்டு பிரிவுக்குரிய ஷரீயா நிர்வாகத்தில் சேவையில் இருந்த சில முஸ்லிம் மதகுருக்கள் தங்களுக்கான தனிப்பட்ட கடன்களையும் பெற்றிருந்தார்கள்.


அகில இலங்கை முஸ்லிம் மதகுருக்கள் சபை என்பது அதன் ஷரீயா நிர்வாக அங்கத்தவர்களின் மிகச்சிறந்த ஒழுக்க மேன்பாட்டை கொண்டிருக்க வேண்டும் என நாம் நம்புகிறோம். ஆனாலும் சாதாரண நிகழ்வுகளின் போதும் விளக்கங்களின் போதும் நீங்கள் தனிப்பட்ட இலாபங்களுக்குள் நுழைந்துவிட்டால்  மூன்றாவது தரப்பின் நன்மைக்காகன குறிக்கோளின் அவசியத்தை நடைமுறைப்படுத்த உங்களால் முடியாது.


ஷரீயா பிரிவு தமது கடமையை சரிவர நிறைவேற்றுமாயின் அது முஸ்லிம்களுக்கு உதவக்கூடியதாகவும் மிக சிறந்ததாகவும் இருந்திருக்கும்.


ஏனென்றால்;


அ. முஸ்லிம் மதகுருக்கள் ஆலோசனை. ஷரீயா பிரிவால் சரியான முறையில் அல்லாஹ்வின் கோட்பாட்டை நடைமுறைப்படுத்த முடியவில்லையாயின் அவர்கள் இத்தகைய முக்கியமான விடயங்களில் தலையிட்டிருக்கக்கூடாது.


(கவனிக்க வேண்டியது, முதலீட்டாளர் ஒருவர் இது பற்றி ஷரீயா பிரிவை சேர்ந்த (புத்தளத்தை சேர்ந்த) முஸ்லிம் மதகுரு ஒருவரிடம் கேட்ட போது தாங்கள் சி இ ப இ பிரிவில் கஜானாவை திறக்க எமக்குக் கடமையில்லை.  என்றும் என்ன நடக்கின்றது என்பதை பார்ப்போம் என்றும் கூறினார்.)


அன்புள்ள மதகுரு றிஸ்வி அவர்களே!


அல்லாஹ்வின் கோட்பாடு இவ்விதம் சாதாரணமானதா?  மேற்படி ஷரீயா பிரிவு உறுப்பினர் சொன்னதற்கிணங்க கஜானவில் என்ன இருக்கிறது என்பதை பார்க்கவும் கணக்குகளை கண்காணிக்கவும் கணக்கிடவும் எத்தனை முறைகள் உள்ளன?


இந்த உயர்வான  விளக்கம் இன்றுவரை செல்லுபடியாகும் என்பதுடன் இஸ்லாமிய வங்கி சூழலில் உள்ள அனைத்து அகக்கட்டுப்பாட்டு சேவைகளையும் பொருத்த முடியும்.


ஆ. இரண்டாவதாக, ஷரீயா பிரிவின் ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் அவர்களது ஒவ்வொரு கலந்து கொள்தலுக்கும் சிலிங்கோ இ ப பிரிவால் கொடுப்பனவு வழங்கப்பட்டது. இதுவும் ஏழை முதலீட்டாளர்களின் பணம்தான். ஆகவே சரியான முறையின் கீழ் செயற்படுவதற்கான பொறுப்பும் கடமையும் ஷரீயா நிர்வாக உறுப்பினர்களுக்கு உண்டு. தமது பொறுப்பை அவர்கள் உணராமல், சிலிங்கோவின் செயற்பாடுகளைக் கண்காணிக்காமல் வெறுமமே கொடுப்பனவை மற்றும் பெற்றுக்கொண்ட மதகுருக்கள் சபை அங்கத்தவர்களின் பணம் எப்படி ஹலாலாகுமா?


சிலிங்கோ இலாப பங்கீட்டு பிரிவின் பண மோசடியும், பதுங்கித் திரியும் மதகுருக்கள் சபையின் பத்வாக் குழுவும்


இந்த பண மோசடி தொடர்பாக உங்களுடனும் உங்கள் உறுப்பினர்களுடனுமான எமது பல சந்திப்புக்களின்; போது அ.இ. முஸ்லிம்
மதகுருக்கள் சபையும் அதன் உறுப்பினர்களும் சிலிங்கோ இ ப இ பிரிவின் ஷரீயா நிர்வாகத்திலிருந்து வாபஸாகி விட்டதாக காட்டுவதற்கே தொடர்ந்தும் முயற்சித்தீர்கள்.
.
ஆனாலும் அகில இலங்கை முஸ்லிம் மதகுருக்கள் சபை 29 ஒக்டோபர் 2008ம் திகதி சி இ ப இ பிரிவுக்கு எச்சரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியிருந்ததை தை நாம் அவதானித்தோம்.


அதுவும் அனைத்து பாதிப்புக்களும் நடந்தேறிய பின்னா யாருக்கும் தெரியாமல் மதகுருக்கள் சபை சிலிங்கோ ப. பிரிவிலிருந்து வாபசாகி விட்டது.


நீங்கள் கூட குறிப்பிட்டீர்கள் அகில இலங்கை மதகுருக்கள் சபை, சிலிங்கோ இ ப இ பிரிவின் ஷரீயா நிர்வாகத்திலிருந்து வாபஸ் பெற்று விட்டதாக ஆங்கில பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளதாக.


ஆனாலும் நாம் ஆயிரரக்கணக்கான முதலீட்டாளர்களை இதுவரை சந்தித்துள்ளோம். அவர்கள் எவருமே இவ்வாறு அ இ முஸ்லிம் மதகுருக்கள் வாபஸ் பெறல் சம்பந்தமான விளம்பரத்தையோ செய்தியையோ கண்டதாக அறியவில்லை. எவ்வாறாயினும் முஸ்லிம் சகோதரர்களில் மிக அதிகமானோர் தமிழ் பத்திரிகைகளையே வாசிப்பவர்கள் என்பதால் இவ்வாறான அதி முக்கிய விடயங்களை தமிழ் பத்திரிகைகளை நிராகரித்து விட்டு ஆங்கில பத்திரிகையில் மட்டும் பிரசுரிப்பது முஸ்லிம் மக்களை ஏமாற்றும் உங்கள் தந்திரத்தையே காட்டுகிறது.


அதே போல் இது சம்பந்தமாக அ இ முஸ்லிம் மதகுருக்கள் சபை பொருளாதார தயாரிப்புகளுக்கான ஹலால் பத்திரம் வழங்கும் போது அல்லது அதனை செயலிழக்கச்செய்யும் போது அனைத்து பள்ளிவாயல்களுக்கும் அறிவித்தல் கொடுப்பது போல் இது விடயத்தையும் அனைத்து பள்ளிவாயல்களுக்கும் அறிவித்திருக்க வேண்டுமே!  சமூகத்துடனான சலக தொடர்புக்கு எப்போதும்; மிக சிறந்த வழியாக இருக்கும்; பள்ளிவாசல்களை சிலிங்கோ விடயத்தில் மட்டும் நீங்கள் ஏன் மறந்து போனீர்கள்.


சிலிங்கோ ப. பிரிவின் சுரண்டலோடு வேறு ஹலால் (?) நிதி நிறுவனங்களுக்கு தாவிப்பாயும் மதகுருக்கள் சபை உறுப்பினர்கள்.


சிலிங்கோ இ ப இ பிரிவின் ஷரியா நிர்வாகத்தில் இயங்கி முஸ்லிம்களின் பணத்தை சூறையாடுவதற்கு துணைபோன அகில இலங்கை மதகுருக்கள் உறுப்பினர்கள் தற்போது வேறு இஸ்லாமிய வங்கி, நிதி நிறுவனங்களின் ஷரீயா பிரிவுகளில் பணி புரிகிறார்கள்.


ஏனைய நிதி நிறுவனங்களில் நிர்வாகக் கதிரைகளில் வீற்றிருந்து பல்லாயிரம் ரூபாய்களை கொடுப்பனவாக பெறும் இவர்கள்  கடந்த காலத்தில் சிலிங்கோ பங்குப் பிரிவு போன்ற மோசடி நிறுவனங்கள் செய்த பகற்கொள்ளைகளுக்கு துணை போக மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?


மேற்படி மதகுருக்கள் சபையின் உறுப்பினர்கள் சிலிங்கோ இலாப பங்கீட்டு பிரிவில் இயங்கியபோது அவர்களின் அக்கறையின்மை மற்றும் பொருத்தமற்ற நடவடிக்கைகள் பற்றி ஆய்வு செய்வதில் மதகுருக்கள் சபையும் அதன் தலைமையும் தோல்வி அடைந்துள்ளது. அதற்கு பகரமாக மதகுருக்கள் சபையின் இந்த உறுப்பினர்கள் தங்களால் பாதிக்கப்பட்ட சிலிங்கோ இலாப பங்கீட்டு நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களின் பாதிப்புக்களையெல்லாம் குப்பையில் போட்டு விட்டு இப்போது வேறு ஹலால் (?) வங்கிகளுக்கு தாவிப்பாய்ந்திருக்கிறார்கள்.


அடுத்த கேள்வியும், கோரிக்கையுமாவது. அதாவது, இந்த ஷரீயா உறுப்பினர்கள் இலங்கையிலுள்ள இஸ்லாமிய வங்கிகளுக்கு ஆலோசனை வழங்குவதற்கும், சமூகமும் ஏனைய இஸ்லாமிய வங்கிகளும் இஸ்லாமிய ஷரீயா அடிப்படையிலான கண்காணிப்பை கொண்டுள்ளதா என்பதை கவனிப்பதற்குமுரிய தகுதிகளை இவர்கள் கொண்டுள்ளார்களா என்பதாகும்.


இத்தகைய முஸ்லிம் மதகுருக்கள் சபையின் ஷரீயா பிரிவு உறுப்பினர்கள் வேறு வங்கிகளில் பணிபுரிய முன் மதகுருக்கள் சபை இவர்களை விசாரணை செய்திருக்க வேண்டும்.


அப்பாவி முதலீட்டாளர்களின் கலக்கம்


சிலிங்கோ இ ப இ பிரிவில் தமது கடின உழைப்பினால் சேர்த்த பணத்தை முதலீடு செய்த அப்பாவி முதலீட்டாளர்கள் இன்று மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் மத்தியில் விதவைகள். ஓய்வு பெற்றவர்கள், தமது பெண்பிள்ளைகளின் திருமணத்துக்காகவும் பிள்ளைகளின் படிப்புக்காகவும்  பணத்தை சேமிப்பிலிட்ட பெற்;றோர் ஆகியோரின் எதிர் பார்ப்புக்கள் சிதறடிக்கப்பட்டுள்ளன.


அத்துடன் முஸ்லிம் அனாதைகள், வயதானவர்கள், வீடு மற்றும் பள்ளிவாயல்களுக்கான நிதிகளும் இதில் அடங்கியுள்ளன.  இந்த முதலீட்டாளர்கள் அனைவருக்கும் அ இ முஸ்லிம் மதகுருக்கள் சபையை மட்டுமே அறிந்தவர்களாக உள்ளனர். இவர்கள் அனைவரும் தமது பணத்தை முதலீடு செய்தது முஸ்லிம் மதகுருக்கள் சபையின் போலி (Fake) பத்வா காரணமாகவே தவிர லலித் கொத்தலவலையின் மீதான நம்பிக்கையினால் அல்ல.


இந்த முதலீட்டாளர்களின் கலக்கம் பாரிய மன அழுத்தத்தை கொடுக்கிறது. நீங்கள் எம்மோடு இணைந்த வரவிருப்பமானால் நாம் உங்களை நாடு முழுவதும் அழைத்துச்சென்று மேற்படி முதலீட்டாளர்கள் எந்தளவுக்கு தாம் சிலிங்கோ இ ப இ பிரிவில் முதலீடு செய்த பணத்தையும் இஸ்லாமிய நிதி நடவடிக்கையிலான மதகுருக்கள் பத்வாவையம் நம்பிக்கொண்டிருக்கிறார்கள் என்பதையும் உங்களுக்கு காட்ட முடியும்.


விதவைகள் வாழ வசதியற்ற நிலையில் தமது கணவரால் விடப்பட்ட பணத்தை இழந்து நிற்கிறார்கள்.  ஓய்வு பெற்றவர்களின் குடும்பங்கள் தமது முழு வாள்நாள் உழைப்பையும் இழந்து நிற்கிறார்கள். பெற்றோர்கள் தமது பெண் பிள்ளைகளுக்கான திருமணத்தை நடத்த முடியாமல் உள்ளனர். இவையனைத்தும் சமூகத்தை பாரிய நெருக்கடிகளுக்கு இட்டுச்சென்றள்ளதால் அவற்றில்முஸ்லிம் மதகுருக்கள் சபைக்கும் பாரிய பொறுப்பு உள்ளது.


அகில இலங்கை மதகுருக்கள் சபையிடமிருந்தான எதிர்பார்ப்புகள்


நாம் ஒரு குழுவாக எமது பணத்தை திருப்பி எடுக்க எடுக்கும் முயற்சிகளுக்கு அ இ முஸ்லிம் மதகுருக்கள் சபையும் செயற்படத்தக்க வகையில் இணைந்து கொள்ள வேண்டும். ஆனாலும் இது விடயத்தில் முஸ்லிம் மதகுருக்கள் சபை எத்தகைய தெளிவான நடவடிக்கையையும் இதுவரை எடுக்கவில்லை. இலங்கையில் வேறு பல இஸ்லாமிய வங்கிகள் உள்ளதால் அவற்றின் பல நிகழ்வுகளில் சிலிங்கோ இ ப இ பிரிவினரிடமிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என நாம் அவற்றிடம் கேட்டிருந்தோம். ஆனாலும் இந்த வேண்டுகோள் சம்பந்தமாக எந்த வித திருப்தியான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை.


இப்பிரச்சனைகள் பற்றி ஆராய சிலிங்கோ தலைவர் லலித் கொத்தலாவலையுடன் ஒரு சந்திப்புக்கான ஏற்பாட்டை செய்யும்படி நாம் உங்களிடம் கோரியிருந்தோம். ஏனென்றால் உங்களின் ஷரீயா பிரிவு உறுப்பினர்கள் லலித் கொத்தலாவையுடன் ஒவ்வொரு சிலிங்கோ இ ப இ பிரிவின் கிளை திறப்பு நிகழ்வுகளுக்கும் கூடவே சென்றனர். ஆனால் முதலிட்டாளர்கள் சார்பில் நீங்கள் லலித் கொத்தலாவையை சந்திக்காமல் விட்டு விட்டீர்கள்.


பிரதி அமைச்சர் ஹிஸ்புள்ளா தனது மனைவியின் பெயரில்; சிலிங்கோ பங்கு இலாப நிதி நிறுவனத்தில் இருந்து அப்பாவி முஸ்லிம்களால் வைப்பிலிடப்பட்ட பணம் 140 மில்லியன் ரூபாயை கடனாக பெற்று ள்ளார். ஆனால் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பொது மக்களின் இந்தப் பணத்தை இதுவரை திருப்பி செலுத்தவில்லை. அப்பாவி முஸ்லிம்களின் பணம் ஹிஸ்புல்லாஹ்வால் இப்படி ஏப்பம் விடப்பட்டிருக்கிறது. இதற்கும் மதகுருக்கள் சபை உடந்தையாக இருந்திருக்கின்றது.


எவ்வித ஆவணங்களுமின்றி மதகுருக்கள் சபை அங்கத்தவர்களின் சிபார்சின் பேரிலேயே  சிலிங்கோ இ ப இ பிரிவு இவருக்கு கடன் வழங்கியிருப்பதாக அறிய வருகிறது.


முஸ்லிம் மதகுருக்கள் சபையின் உதவியோடு அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் மனைவியின் பெயரால் ஏப்பமிடப்பட்ட அந்தப் பணம் சிலிங்கோ இ ப இ பிரிவிலிருந்து 2004ம் ஆண்டு கடனாக பெறப்பட்டது. காத்தான்குடி மதகுருக்களுடன் தொடர்பு கொண்டு பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹவை இது பற்றிய விசாரணைக்கு அழைத்து வரும்படி நாம் உங்களிடம் கோரினோம்.


ஏனென்றால் அவர் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசியல்வாதி என்பதால் பொது மக்களிடத்தில் பொறுப்புச் சொல்ல வேண்டியவர். இது விடயத்தில் அவருக்கான அழுத்தத்தை கொடுப்பதற்கு அ இ முஸ்லிம் மதகுருக்கள் சபைக்கு உரிமை உண்டு. எனெனில் முஸ்லிம் மதகுருக்கள் சபை அப்பாவி முஸ்லிம் சமூகத்தை தற்காலிமாக பிரதிநிதித்துவப்படுத்துகிறது. அதுமட்டுமல்லாமல் மதகுருக்கள் சபை ஹலால் என்று அங்கீகரித்த நிதி நிறுவனம் ஒன்றிலிருந்து பெற்ப்பட்ட பணத்தை திருப்பி கொடுக்க மறுக்கும் போது அவரை கண்டிக்கும் உரிமை உலமா சபைக்கு இருக்கிறது.


அப்பாவி  முஸ்லிம்களின் பணத்தை பகற் கொள்ளையடித்த அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வோடும் அவரது கட்சியான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸோடும் உங்களுக்குள்ள தனிப்பட்ட உறவின் காரணமாக இன்று வரை நீங்கள் அதற்கு எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை. மாறாக நீங்கள் அடிக்கடி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் வீட்டில் அருசுவை உணவருந்தி அவரை ஆசிர்வதித்து வருகின்றீர்கள்.


அதுமட்டுமல்லாமல் உங்களது மதகுருக்கள் சபையின் உறுப்பினர்கள் பலர் டொக்டர் ஸாகிர் நாய்க்குடன் இணைந்து காத்தான்குடியில் உள்ள ஹிஸ்புள்ளாவின்  இல்லத்தில் பணம் திரட்டும்; நிகழ்விலும்; கலந்து கொண்டு உண்டு புரண்டு களிப்புற்று கிடந்தார்கள்.


பொதுப்பணத்தை சூறையாடியவர்களை கண்டிக்க, தண்டிக்க வேண்டிய உங்கள் மதகுருக்கள் அவரை தட்டிக் கொடுத்துக்கொண்டிருக்கின்றார்கள். ஹலால் பத்வாவை வழங்குவது மடடும்தானா உங்கள் பணி? ஹராமான முறையில் பொதுப்பணத்தை அபகரிப்பது ஹராம் அந்த அமைச்சருக்கு சொல்ல உங்கள் அரசியல் நட்பு உங்கள் நாவை அடக்குகிறதா?


அன்புள்ள  மதகுரு றிஸ்வி அவர்களே!


;இந்த நாட்டில் குறிப்பாக ஆதம் (அலை) அவர்கள் சுவர்க்கத்திருந்து பூமிக்கு வந்த போது கால் பதித்ததாக நம்பப்படும் இந்த நாட்டில் இஸ்லாமிய நிதி அபிவிருத்தியை காண நாம் அனைவரும்  விரும்புகிறோம்.


இதற்காக என்ன தேவை என்றால் சரியான கண்காணிப்பும் வழிகாட்டலும் கொண்ட பணம், பதவி, பேராசை போன்ற உலகாயத தேவைகளை புறந்தள்ளிய தூய்மையாக அமைப்பு  ஒன்றின் அவசியத் தேவை இன்று உணரப்படுகின்றது.


உங்கள் தூர நோக்கற்ற ஹலால் பத்வாவினாலும், சிலிங்கோ பங்கு இலாப நிறுவனத்தின் மோசடியினாலும் பாதிப்புற்று நடுத்ததெருவில் நிர்க்கதியற்று நிற்கின்ற மக்களின் பிரார்த்தனைக்கு பயந்துகொள்ளுங்கள். அநீதியிழைக்கப்பட்டவனரின் பிரார்த்தனை திரையின்றி அல்லாஹ்வால் ஏற்றுக்ககொள்ளப்படும் என்று அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் சொன்ன உயரிய வாக்கை முஸ்லிம் மதகுருக்கள் சபையின் தலைவரான உங்களுக்கு நினைவு படுத்துகிறோம். பொதுப்பணத்தை சூறையாடுவதற்கு துணைபோன உங்களை மறுமையில் அல்லாஹு தஆலா கேட்காமல் விட மாட்டான்.


அல்லாஹ்வின் உதவியால் நாம் எமது பணத்தை மீளப்பெறுவதில் இன்னமும் போராட்டத்தை விட்டு விடவில்லை.  நாம் இந்தப்பணத்தை ஹலாலான வழியில் சம்பாதித்தோம் என்பதும் அதனை மீளப்பெறுவோம் என்பதும் எமக்குத்தெரியும். இது சம்பந்தமாக அனைத்து நடவடிக்கைகளையும் சட்ட நடவடிக்கைகளையும்  எடுக்கவுள்ளோம்.


எனினும் இது விடயத்தில் அ இ முஸ்லிம் மதகுருக்கள் சபை இன்னமும் மௌனமாக இருப்பது மட்டுமல்லாமல் அந்தப்பணத்தை சூறையாடிய   அரசியல்;வாதிகளோடு;  கூடிக்குலாவுவதும் கவலைக்குரிய விடயமாகும்.


பணத்தை இழந்து பாதிக்கப்பட்ட மக்க்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு, அந்த ஊநலடinஉழ Pசழகவை ளூயசiபெ என்ற மோசடி நிதி நிறுவனத்திற்கு ஹலால் பத்வா வழங்கியவர்கள் என்ற ரிதியில் உங்களுக்கு  இருக்கும் தார்மீக பொறுப்பை உதாசீனம் செய்யாதீர்கள். பணம், பட்டம், பதவி போன்ற உலக ஆதாயங்களையும் விட்டு தூய்மையான Muslim University Islamic Professionals' தலைமைத்துவம் ஒன்றை அல்லாஹு தஆலா இந்த முஸ்லிம் உம்மத்திற்ககு வழங்க வேண்டும் என்று பிரார்த்திக்கின்றோம்.


صدقة تطفئ الخطيئة كما يطفئ الماء النار


ஒரு சதக்கா என்பது தண்ணீர் நெருப்பை அணைப்பது போல் பாவத்தை அழித்து விடும் என முஹம்மது நபி (ஸல்) அவர்கள் சொல்லியுள்ளார்கள்.


வஸ்ஸலாம்




இவ்வண்ணம்


சிலிங்கோ இலாப பங்கீட்டு முதலீட்டாளர்கள் சங்கம்
இல. 17, சுமனராம றோட். கல்கிஸ்ஸ (By: பத்ர் களம்)


02/

All Ceylon Muslim Clerics Association (ACMCA) is a ‘Sick man’ of Sri Lankan Muslim Community and promoting 'Dark Age' cultures, therefore All the members of ACMCA will be accommodated under ‘Islamic Volunteer Service Organization’ (IVSO), for Volunteer works. They should work for Muslim community developments; if possible, without charging any fees, Salaries or Monetary gains (including no Bayan for Buriyani Foods - B4B). 

Also they should undergo for ‘proper intensive culturing process and counselling therapy’ to minimize their ‘Anti Social Behaviors (ASB)’ in the Muslim community of Sri Lanka. Says: Hon. M. R. Mohamed, Muslim Enlightenment Thinker, Forward-Rational Islamic Thinker of ‘Islamic Think Tank-Sri Lanka’

We do welcome open-honest-professional debates on the matters of Muslim community of Sri Lanka & Worldwide

‘Halal Certificate’ and ‘Islamic Fatwa’ on Islamic matters will be delivered by ‘Islamic Think Tank-Sri Lanka’ in Future.
-Islamic Think Tank - Sri Lanka (ITTSL) Vs. All Ceylon Muslim Clerics Association (ACMCA)
-Mosques Vs. Maddrassas
-University Vs. Maddrassas
-Muslim Professionals Vs. Muslim Clerics
-Protestant Muslim (No Clerics at all) Vs. Taliban Muslim (clerics & pro-clerics) 
-Islam vs. Religion

Muslim Clerics are Just like all our ordinary Brothers/Sisiters. but they are not our imams,  Leaders, or guiders...etc. (Never!), Our Global call is 'Islam & Khilafah' without Muslim clerics, Papacy, & Talibanization...!!!.


03/ 
Must see full 2 hr movie & Listen to our Criticism on Muslim Clerics & Talibanization;