Pages

Friday 3 June 2011

‘இஸ்லாம் தான் தீர்வு’ என்பது இனி வேண்டாம்! இக்வான்களின் 'புதிய இஸ்லாமிய' அரசியல்(?)

எகிப்தில் இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கம் தான் உருவாக்கியுள்ள புதியகட்சியின் கொள்கையில் புதிய மாற்றங்களை அறிவித்திருக்கிறது.

ஏற்கனவே அதன் அரசியல் கொள்கையிலிருந்த ‘இஸ்லாம் தான் தீர்வு’ என்ற சுலோகத்தை நீக்கியுள்ளதாக அதன் உத்தியோகப+ர்வ இணையதளம் அறிவித்துள்ளது.  இஸ்லாம்தான் தீர்வு என்ற அந்த வாசகத்திற்குப் பதிலாக ‘சுதந்திரம்தான் தீர்வு! நீதி அமுலுக்குரியது ’“Freedom is the solution and justice is the application” என்ற சுலோகத்தை மாற்றியிருப்பதாகவும் அது அறிவித்துள்ளது.இக்வான்களின் இந்த திடீர் அரசியல் கொள்கை மாற்றத்தால் அந்த இயக்கத்தின் உள்ளே கருத்துமோதல்கள் உருவாக்கியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன். குறிப்பாக இளைஞர் அமைப்பினர் இக்கருத்தோடு முரண்படுவதாகவும் அறிய வருகிறது. 

‘இஸ்லாம் தான் தீர்வு’ என்று காலாகாலமாய் குரல் எழுப்பி வந்த இக்வான்கள், இதற்கு மாற்றமான கருத்துக்களைக் கொண்டவர்களை காரசாரமாக விமர்சித்தும், 'தாகூத்துகள்' என்று  துற்றியும் வந்தனர்.
இன்று இக்வான்களே ''இஸ்லாம் தீர்வு இல்லை'' என்ற முடிவுக்கு வந்திருப்பது, இஸ்லாமிய அரசியல் கருத்தியலிலிந்து நழுவி அவர்கள் அதழ பாதாளத்தை நோக்கிய வீழ்ச்சிப் பயணத்தை அரம்பித்திருக்கின்றார்கள் என்பதையே எடுத்துக்காட்டுகிறது. (badrkalam


2/ பயோ டேட்டா - இக்வானுல் முஸ்லிமீன் 


1.0 வைத்த பெயர் - இக்வானுல் முஸ்லிமீன் .
2.0 தற்போதைய பெயர் - நீதிக்கும் சுதந்திரத்துக்குமான கட்சி .
3.0 மறைக்கவிரும்புவது - இஸ்லாமிய அடிப்படையிலான கொள்கையை
4.0 காட்டத்துடிப்பது - நாங்கள் ஜனநாயக வாதிகள்
5.0 மறக்கவிரும்புவது - ஆரம்பகால வன்முறைகள்
6.0 நண்பர்கள் - சலபிகள் அல்ல
7.0 நீண்டகால சாதனை - வன்முறையற்ற செயற்பாடு
8.0 கைவிட்ட சுலோகம் - "இஸ்லாமே ஒரே தீர்வு "
9.0 சமீபத்திய மனக்கவலை - எகிப்தியப்புரட்சிகளை முன்னின்று நடத்தாமை
10. ஒரே இலக்கு - எகிப்தின் ஆட்சியைக் கைப்பற்றல்